டெலிபதி என்றால் என்ன?

டெலிபதி என்பது கிரேக்க சொற்களான tele (தூரம்) மற்றும் patheia ( உணர்வு) என்பதில் இருந்து வந்தது.இது மனித மற்றும் பிற உயிரினங்களுடன் வார்த்தை மொழி ,உடல் மொழி அல்லது எந்த ஒரு பிற உபகரணங்களின்றி ஆழ்மனதின் மூலம் தொடர்பு கொள்ளும் முறையாகும்.இது ESP - இன் ஒரு பகுதியாக விளங்குகிறது.

முதலில் உங்கள் எண்ண அலைகளுக்கு ஏத்த எண்ண அலைகள் உள்ள ஒரு நண்பரை இதில் உதவியாளராக சேர்த்துக் கொள்ளுங்கள். என்றுமே இது போன்ற விஷயங்களில் ஈடுபாடோ, நம்பிக்கையோ இல்லாத ஆள்களைத் தவிருங்கள். உங்கள் சோதனை சமயங்களில் பார்வையாளராகக் கூட அது போன்ற ஆட்கள் அருகில் இருக்க அனுமதிக்க வேண்டாம். 

இது ஆரம்பக் கட்டங்களில் மிகவும் அவசியம். இதில் நல்ல தேர்ச்சி அடைந்த பின்னர், உங்கள் ஆழ்மன சக்திகள் வலிமை அடைந்த பின்னர் மற்றவர்களின் எப்படிப்பட்ட எதிர்மறை எண்ண அலைகளும் உங்களையும், உங்கள் சக்தியையும் பாதிக்காது. ஆனால் அந்த நிலையை அடையும் வரை ஒத்த எண்ண அலைகள் உள்ள மனிதர்கள், சூழ்நிலைகளே சோதனைக்கு உகந்தவை.

நண்பரிடம் ஒன்றில் இருந்து பத்திற்குள்ளாக ஒரு எண்ணை நினைக்கச் சொல்லுங்கள். அவரை அந்த எண்ணை அவருடைய மனத்திரையில் பெரியதாக உருவாக்கி ஒளிரச்செய்து காணச் சொல்லுங்கள். பின் கண்களை மூடிக்கொண்டு உங்கள் மனத்திரையில் அவர் கண்டு கொண்டு இருக்கும் எண்ணைக் காண முயற்சி செய்யுங்கள். அந்த எண் உங்கள் மனத்திரையில் ஒளிர வேண்டும் என்று எதிர்பாருங்கள்.இந்த முயற்சியில் நீங்கள் உங்களை அறியாமலேயே யூகம் செய்ய முயற்சிக்கக் கூடும்.

டெலிபதி அனுப்புவர்களிடம் (sender or agent) பெறுபவர்கள்(receiver or percipient) நேரடியாக ஆழ்மனதின் மூலம் தகவல்களை பெறுவார்கள். ஆனால் இது இன்று வரை அதிகார்பபூர்வமாக உறுதிசெய்யப்படவில்லை.

இரட்டையர் (Twins)களிடம் இந்த டெலிபதி அதிகமாக செயல்படுகிறது.