முடி அடர்த்தியாக வளர...

தலை முடி அடர்த்தியாக வளர வேண்டும் என்றால் தலை முடி உதிராமல் இருக்க வேண்டும். இவ்வாறு உதிர்ந்தால் முதலில் தலை முடி உதிர்வதை சரிசெய்ய வேண்டும். பின்னர் முடி அடர்த்தியாக வளர்வதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

வெங்காயத்திற்கு நுண் கிருமிகள் மற்றும் பூஞ்சையை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது. இதை தலை முடியில் பயன்படுத்துவதால் முடி கொட்டுவது தடுக்க படுகிறது.முடியின் வேர்கால்களுக்கு ஊட்டச்சத்து கொடுத்து தலை முடி இழந்த ஊட்டச்சத்தை திரும்ப பெற உதவுகிறது. சல்பர் அதிகமாக இருப்பதால் முடி உடைவதையும், அடர்த்தி குறைவதையும் தடுக்கிறது.வெங்காயத்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது முடிக்கு பளபளப்பு அதிகமாகிறது.

செம்பருத்தி இலைகளை எடுத்து அரைத்து, அதில் தயிர் சிறிது சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, தலைமுடியில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி செய்தால் தலைமுடி வலிமையடைந்து, முடியின் வளர்ச்சியும் மேம்படும்.

வெந்தயம் 1 டேபிள் ஸ்பூன் இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை செரும்பருத்தி இலையுடன் சேர்த்து அரைத்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து அலச வேண்டும். இதனால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

கற்றாழை ஜெல் உங்கள் கூந்தலுக்கு போதுமான ஈரப்பதம் மற்றும் நீர்ச்சத்தை கொடுக்கிறது. இந்த ஜெல்லில் புரோட்டியோலைடிக் என்சைம் உள்ளது. இது தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி மயிர்கால்களுக்கு போஷாக்கு கொடுத்து கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது.இது கூந்தல் உதிர்வை குறைத்து கூந்தல் அடர்த்தியாக வளர பயன்படுகிறது.

கடுகு எண்ணெயை வாரத்தில் மூன்று நாட்கள் வரை பயன்படுத்தலாம். விரைவில் தலைமுடி அடர்த்தியாகவும், தடிமனாகவும் மாறக்கூடும். அதோடு கடுகு எண்ணெயில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்களிலும் துத்தநாகம் மற்றும் ஃபோலேட் உள்ளது. இது முடியை இயற்கையாகவே கருமை நிறமாக்கும்.