கருப்பு ஆல்கலைன் தண்ணீர் சிறப்பு வாய்ந்தது, நம்முடைய உடலை அதிக நீரேற்றத்துடன் வைத்திருக்கக்கூடியது. சாதாரண சுத்தமான நீரின் பிஎச் அளவு ஏழு. இதனுடன் பிற பொருட்களை சேர்த்து அதன் பிஎச் அளவு அதிகரிக்கும் போது தான் அதனை ஆல்கலைன் தண்ணீர் என்கிறார்கள். இதன் விரிவாக்கம் பவர் ஆஃப் ஹைட்ரஜன் ஆகும்.
ஒரு பொருளை கரைக்கக்கூடிய திரவத்தின் அளவுகோல் தான் இந்த பிஎச் என்பது. இதனை 14 வரையிலான மதிப்பைக் கொண்டிருக்கிறது. இந்த மதிப்புகளை வைத்து திரவத்தில் இருக்கிற அமிலத்தன்மையையும் காரத்தன்மையையும் நீங்கள் கண்டுபிடிக்கலாம். இவை இரண்டுக்கும் நடுவில் இருப்பது நடுநிலை என்பார்கள். பிஎச் அளவுகோலின் படி திரவம் ஏழாம் இடத்தில் இருந்தால் அது நடுநிலையில் இருக்கிறது என்று அர்த்தம். அதே ஏழுக்கு கீழே இந்தால் அமிலத்தன்மை கொண்டவை என்றும் ஏழுக்கு மேலே இருப்பவற்றை காரத்தன்மை கொண்டவை என்றும் பிரிக்கிறார்கள்.
உடலில் அமிலத்தன்மை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. நிறைய மினரல்களும் பிஎச் அளவும் அதிகமாக இருப்பதால் உடலில் தேவையற்ற கழிவுகள் சேருவதைத் தடுக்கிறது. அதோடு நம்முடைய உடல் மற்ற நுண்ணூட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கான ஆற்றலையும் இந்த ஆல்கலைன் தண்ணீர் கொடுக்கிறது.
சருமத்தை பாதுகாக்க கூடியது, மனச்சோர்வை நீக்கும் தன்மை இருக்கிறது, இதுபோன்ற நிறைய நன்மைகளை கொண்டு இருக்கிறது.அது மட்டுமில்லாமல் நீண்ட நேரம் உடல் சுறுசுறுப்பாக இயங்க தேவையான ஆற்றலை வழங்குகிறது.
இந்த நீரில் இருக்கக்கூடிய கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம், போன்ற தனிமங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை உடலில் மேம்படுத்துகிறது.இதன் சுவை சாதாரண தண்ணீரை போன்று தான் இருக்கும், ஆனால் இதை வெறும் தண்ணீர் என்று அவ்வளவு எளிதாக கருதக்கூடாது.இந்த நீரில் கிட்டத்தட்ட 70 க்கும் மேற்பட்ட தனிமங்கள் சேர்க்கப்பட்டுள்ளது அதனால் இது பல நன்மைகளை உடலுக்கு வழங்குகிறது.