செம்பரத்தை, செம்பருத்தி என்று இதில் இரண்டு வகைகள் இருந்தன. ஆனால் செம்பரத்தை என்ற பூ தான் இன்றைக்கு செம்பருத்தி என்ற பெயரில் மாறி நம் வழக்கத்தில் உள்ளது. உண்மையான செம்பருத்தி என்பது ஒரு பருத்தி வகைத் தாவரம். அது இப்போது அழிந்து விட்டது. இதன் மருத்துவ குணத்தை அறிந்த சித்தர்கள் இந்த செம்பருத்திப்பூவை தங்கபஸ்பம் என்ற பெயர்கொண்டு அழைத்து வந்தனர்.
செம்பருத்தி பூவில் ஆன்டி ஆக்ஸிடன்கள், ஆந்தோசயனின் மற்றும் ப்ளோவனாய்டுகள் போன்றவைகள் காணப்படுகின்றன. இது இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.உயர் இரத்த சர்க்கரை உங்கள் நரம்புகள், கண்கள் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. மேலும், இது இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. எனவே செம்பருத்தி சாற்றை 21 நாட்கள் குடித்து வர இரத்த சர்க்கரை அளவு குறைகிறது.இரத்த குழாயை அடைக்கும் கொழுப்பால் இதய நோய்கள் வரும் ஆபத்து அதிகம். இந்த பூவின் சாற்றை பிழிந்து வாய்வழியாக எடுத்துக் கொண்டு வரும் போது இரத்த கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. இது கொலஸ்ட்ரால் அளவை 22% வரை குறைக்கிறது.
இவை தவிர உஷ்ணம் மற்றும் கோபத்தைக் கட்டுப்படுத்தி, உடலுக்கு குளிர்ச்சியையும் மனதுக்கு அமைதியையும் தரக்கூடியது.இதன் இலையை வெறுமனே அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் முடி பட்டுப்போன்று மென்மையாக மாறும். ஷாம்புகளை தலையில் தேய்த்து பக்க விளைவுகளால் அவதிப்படுவோர் அதுக்கு மாற்றாக செம்பருத்தியைப் பயன்படுத்தலாம்.
செம்பருத்தி பூ டீயை தொடர்ந்து 12 நாட்கள் குடித்து வந்தால் சிஸ்டோலிக் இரத்த அழுத்தமானது 11.2% வரை குறைகிறது. டயஸ்டோலிக் இரத்த அழுத்தமானது 10.7% வரை குறைகிறது. உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள் செம்பருத்தி டீயை குடித்து வரலாம்.
தோல் நோய் வராமல் பாதுகாக்க காயவைத்த செம்பருத்தி இதழ்களுடன், ஆவாரம்பூ பாசிப்பயிறு, கருவேப்பிலை இவைகளைச் சேர்த்து பொடியாக்கி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். தினம்தோறும் குளிப்பதற்கு, சோப்பிற்கு பதிலாக இந்த தூளை உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் தோல் நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். இதன் மூலம் நம் சருமமும் பளபளப்பாக இருக்கும்.