ஆதி காலம் முதல் இப்போது வரை தமிழர்கள் காய்கறி வகைகளுக்கு முக்கியத்துவம் அதிகமாக கொடுத்து வருகின்றனர். மாமிச உணவு வகைகளை அதிகம் உண்பதை விட, காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொண்டாலே எந்த ஒரு நோயும் நமக்கு ஏற்படுவதில்லை என்பதை அப்போதே நமக்கு உணர்த்திய நம் முன்னோர்களை சற்று மறந்தே தான் போய் விட்டோம்.
விலை அதிகமுள்ள காய்கறி மற்றும் பழங்களை விட, நாம் அலட்சியமாக நினைக்கும் சர்வ சாதாரணமாக கிடைக்கக்கூடிய சில காய்கறி வகைகள் நமக்கு தீவிரமான பல நோய்களை கட்டுபடுத்துகிறது.
காய்கறி சூப் குடித்து வருவதால் நம் உடலில் வயிற்றுப்போக்கு மற்றும் இதய நோய்கள் ஏற்படாது.உடலில் உள்ள சத்துக்களை எல்லாம் அதிகரிப்பதால், குளிர், இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்ற உணவாகும்.
குழந்தைகளுக்கு சத்தாண உணவாகவும், அதே சமயம் அவர்களுக்கு பிடித்த வகையிலும் கொடுப்பதற்கு இந்த காய்கறி சூப் சரியான தேர்வாக இருக்கும். சூப் செய்யவும் மிகவும் எளிமையாக இருக்கும்.
காய்கறி சூப்பில் அதிகளவு சத்துக்கள் உள்ளது.மற்றும் தினமும் காய்கறி சூப் குடிப்பதால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நம் உடலுக்கு தேவையான சத்துகளில் காய்கறிகளில் அதிக அளவு உள்ளது.
இதனால் நாம் காய்கறிகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும். மேலும் நம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. நம் உடலில் செரிமான பிரச்சனை ஏற்படாமல் இருக்க தினமும் காய்கறி சூப் குடிக்கலாம்.
ஜீரண சக்தி அதிகரிக்க தினமும் காய்கறி சூப்பை குடித்து வரலாம். அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்க தினமும் காய்கறி சூப்பை குடித்து வரலாம். மேலும் ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளவர்கள் தினமும் காய்கறி சூப்பை குடிக்கலாம். நார்ச்சத்து உடலில் அதிகரிக்க உதவும்.