வாதுமைக் கொட்டையின்( WALNUT) பயன்கள்:

 

வாதுமைக் கொட்டை (Walnut) என்பது அக்கருட்டு பேரினத்தில் அடங்கியுள்ள யக்லாண்டசியே குடும்பத்தைச் சேர்ந்த யக்லான்சு ரெஜியா மரத்தின் கொட்டையாகும். இந்தக் கொட்டையானது மேலோட்டுடன் கூடியதாகும். பச்சையான கொட்டைகள் ஊறுகாய் தயாரிக்கவும் நன்கு விளைந்த கொட்டைகள் உணவாகவும் பயன்படுகின்றன.இவை ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரமாகும். வால்நட் மரங்கள் கிழக்கு வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டுள்ளன .

வால்நட் இரண்டு தட்டையான பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வணிக ரீதியாக விற்கப்படுகிறது. அக்ரூட் பருப்புகள் பச்சையாகவோ அல்லது வறுத்ததாகவோ, உப்பு அல்லது உப்பு இல்லாமல் கிடைக்கின்றன.

இது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.  இதில் ஒமேகா 3 போன்ற அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள், மூளையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும்.நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு அக்ரூட் பருப்பு எனப்படும் வால்நட்ஸ் மிகவும் சிறந்தது. வால்நட்சில் 4 கி புரதம், 2 கி ஃபைபர், கார்போஹைட்ரேட், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம், செலினியம், வைட்டமின் B, அதிக அளவில் வைட்டமின் E மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இது மூளையின் செயல்பாட்டை நேர்மறையாக ஆதரிப்பது மட்டுமல்லாமல் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகிறது.

இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலமும் இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.இது இதய பாதுகாப்பிற்கு மிகவும் உதவுகிறது. மேலும் இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.தினமும் சாப்பிட்டு வர அஜீரண கோளாறு மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றை சரி செய்து வயிற்றில் உள்ள அமிலங்களை சீராக்குகிறது.பித்த பையில் கற்கள் உள்ளவர்கள் தினமும் வால்நட் சாப்பிட்டு வந்தால் படிப் படியாக குறைந்துவிடும்.வால்நட் எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது எனவே எடை குறைக்க நினைப்பவர்கள் வால்நட் தினமும் சாப்பிட்டால் படிப்படியாக எடை குறையும்.வால்நட்டில் அதிக அளவில் வைட்டமின் பி7 மற்றும் பயோட்டின் சத்துக்கள் இருப்பதால் தலை முடி உதிர்வதை தடுத்து நன்றாக வளர செய்கிறது.