ப்ரவுன் நிறத்தில் தலையில் பூ வடிவத்துடன் இருக்கும் இந்த அழகிய கிராம்பு சந்தேகத்திற்கு இடமின்றி சிறியதாக இருக்கிறது, ஆனால்அவற்றின் நன்மைகள் அதிசயமானவையாக இருக்கிறது.
கிராம்பை மசாலாவாகப் பயன்படுத்துவது இந்தியாவில் மிகவும் பரவலாக உள்ளது. இதன் அறிவியல் பெயர் சைஜியம் அரோமாட்டிகம். 9 வருடங்களுக்கு ஒருமுறை ஒரு கிராம்பு மரம் மொட்டு விடுகிறது. இதனை உலர வைத்த பின்னர் கிராம்பு தயாராகிறது.
கிராம்பு மொட்டுகள் வாய்வழி நுண்ணுயிரிகளை 70 சதவீதம் குறைக்கலாம். இதனால்தான் கிராம்பு பல பற்பசைகளில் பயன்படுத்தப்படுகிறது.
கிராம்புகளின் பண்புகளில் இருமல் மற்றும் சளி போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு அடங்கும். கிராம்பு ஒரு எதிர்ப்பு அழற்சி விளைவைக் கொண்டிருக்கிறது, இது சளி மற்றும் இருமலைக் குறைக்கும். இது வாயிலிருந்து முழு சளியையும் அகற்றி மேல் சுவாச மண்டலத்தை சுத்தம் செய்கிறது.
நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆதரவுக்காக நாம் சாப்பிடும் மிகச்சிறப்பான உணவுகளில் கிராம்பும் ஒன்று. ஏனெனில் இவை உடலில் இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. இது நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. அதோடு இவற்றில் வைட்டமின் சி-யும் உள்ளன.
கிராம்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்கிறது.
தலைவலி ஏற்பட்டால் கிராம்பை பொடியாக்கி பேஸ்ட் செய்து அதனுடன் ராக் சால்ட் சேர்த்து பாலுடன் கலந்து குடித்தால் போதும், உடனடியாக தலைவலி தீரும்.
கிராம்பில் உள்ள குறிப்பிட்ட பொருட்களான ப்ளேவோனாய்டுகள், மாங்கனீசு மற்றும் யூஜேனோல் போன்றவை எலும்பு மற்றும் மூட்டுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இந்த உட்பொருட்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிப்பதோடு, எலும்பு திசுக்களின் உருவாக்கத்திற்கும், எலும்புகளுக்கு ஆரோக்கியமான கனிமங்களை பரிமாற்றம் செய்வதற்கும் உதவுகின்றன.
இன்று பலர் சந்திக்கும் ஓர் வாய் சம்பந்தமான பிரச்சனை தான் வாய் துர்நாற்றம். இந்த வாய் துர்நாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினால், தினமும் 2 கிராம்பு சாப்பிடுங்கள். இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், வாயில் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கின்றன.
கிராம்பில் மைக்ரோ ஊட்டச்சத்தான பாலிஃபீனால்கள் உள்ளன. பெரும்பாலும் பாலிஃபீனால்கள் தாவர வகை உணவுகளை உண்ணும் போது கிடைக்கின்றன. பாலிஃபீனால்கள் உடலுக்கு நன்மைகளை வழங்கக்கூடியது. குறிப்பாக இது கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
இரத்த சர்க்கரை பிரச்சனை உள்ளவர்களுக்கு கிராம்பு மிகவும் நல்லது. ஏனெனில் கிராம்பு உடலினுள் இன்சுலின் போன்று செயல்படும். இவை இரத்தத்தில் இருந்து அதிகப்படியான சர்க்கரையை உயிரணுக்களில் ஏற்றுமதி செய்ய உதவுகின்றன, சமநிலையை மீட்டெடுக்கின்றன. மேலும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கி உதவுகின்றன.