அத்திப்பழத்தின் நன்மைகளைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த அத்திப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைக்காது. ஆனால் அதன் உலர்ந்த வடிவம் அனைத்து சூப்பர் மார்கெட்டுகளிலும் கிடைக்கும்.
கால்சியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், சோடியம் போன்றவை உள்ளது. இத்தகைய சத்துக்கள் நிறைந்த அத்திப்பழத்தை அல்லது உலர்ந்த அத்திப்பழத்தை தினமும் காலையில் ஒன்று சாப்பிட்டு வந்தால், எண்ணற்ற பலன்களைப் பெறலாம்.
ஒரு உலர்ந்த அத்திப்பழமானது அன்றாடம் தேவைப்படும் கால்சியத்தில் 3 சதவீதத்தை வழங்குகிறது. இதனை தினமும் உட்கொண்டு வந்தால், எலும்புகள் வலிமையுடன் இருக்கும்.
வெறும் வயிற்றில் உலர்ந்த அல்லது பழுத்த அத்திப் பழங்களை 2, 3 என தினமும் சாப்பிட்ட் வர மலச்சிக்கல் சரியாகும்.
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. இருப்பினும் உலர்ந்த அத்திப்பழத்தில் சர்க்கரை அதிகம் இருப்பதால், மருத்துவரிடம் கலந்தாலோசித்து பின் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உலர்ந்த அத்திப்பழத்தில் இரும்புச்சத்து உள்ளது. அதிலும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தின் அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 2% கிடைக்கிறது. உடலில் ஹீமோகுளோபினை எடுத்து செல்வதற்கு இரும்புச்சத்து மிகவும் இன்றியமையாதது. எனவே இதனை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், இரத்த சோகை பிரச்சனை நீங்கும்.
உடல் எடை குறைக்க நினைப்போர் உணவை அதிகம் சாப்பிடுவதாக உணர்ந்தால் உலர்ந்த அத்திப்பழத்தை 2 சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வயிறு முழுமையாகிவிடும். இதனால் நீண்ட நேரம் பசிக்காது.
உப்பு அதிகம் எடுத்துக் கொள்ளும் போது, உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும். இதனால் சோடியம் மற்றும் பொட்டாசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஆனால் 1 உலர்ந்த அத்திப்பழத்தில் 129 மில்லிகிராம் பொட்டாசியம் மற்றும் 2 மிகி சோடியம் உள்ளது இதனால் இரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
இது கரு உருவாக உதவும் என்பது ஆய்விலும் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் கருப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் , அண்டவிடுப்பு வேலைகளை சிறபாக செய்வதற்கும் உதவுகிறது. ஆண்களுக்கு விந்தணு குறைபாடு இருந்தால் அத்திப்பழம் சாப்பிட சரியாகும். எனவே ஆண், பெண் இருவரும் பாலில் ஊற வைத்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
அத்திப்பழத்தில் உள்ள அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளால், ப்ரீ-ராடிக்கல்களின் மூலம் டி.என்.ஏ பாதிப்படைவது தடுக்கப்பட்டு, புற்றுநோய் வரும் அபாயம் குறையும்.
தினமும் அத்திப்பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால், அழகான மற்றும் மென்மையான சருமம் கிடைப்பதோடு, இளமையையும் தக்க வைக்கலாம்.