பிஸ்தாவின் பல்வேறு நன்மைகள்

 தினமும் ஒரே வகையான நட்ஸ் வகைகளை சாப்பிடுவதை விட தினம் ஒன்றாக அல்லது தினசரி ஒன்றாக என வகைப்படுத்தி சாப்பிடுவதன் மூலம் உடலில் சத்துகள் குறையாமல் பாதுகாக்க முடியும்.


ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் வகைகளில் உடலுக்கு தேவையான புரதம், வைட்டமின், ஃபைபர் உள்ளிட்ட சத்துகள் அதிகம் உண்டு என்பதால் தினம் ஒரு வகை சாப்பிடுவதன் மூலம் பல நோய்களை வராமல் கட்டுப்படுத்த முடியும். அதே சமயம் நட்ஸ்கள் மிகவும் விலை அதிகமானதும் கூட. அதனால் அவற்றை வாங்கி சாப்பிடுவது சற்று கடினம் தான். இருப்பினும் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், நட்ஸ்களை அடிக்கடி இல்லாவிட்டாலும், அவ்வப்போது வாங்கி சாப்பிட வேண்டியது அவசியம்.ட்ரை ஃப்ரூட்ஸ் வகையில் பிஸ்தா பருப்புகளும் அடக்கம்.

பிஸ்தா சாப்பிடுவதன் மூலம், கண் பார்வை மேம்படுவதோடு, மாகுலர் திசு செயலிழப்பினால் கண் பார்வையை இழப்பதைத் தவிர்க்கலாம்.

மூளைக்கு வேலை கொடுத்தால் எப்போதும் சுறுசுறுப்புக்கு பஞ்சம் இருக்காது பிஸ்தா கொட்டைகளில் இருக்கும் வைட்டமின் இ மூளைக்கு இத்தகைய குணங்களை தருகிறது. மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக கிடைப்பதால் மூளை பாதிக்கப்படாமல் தடுக்கப்படுகிறது.

பிஸ்தாக்களின் பச்சை மற்றூம் ஊதா நிற கொட்டைகள் மூளையின் அறிவாற்றலை மேம்படுத்தும் சிந்தித்தல் மற்றூம் புரிதலுக்கான திறனுள்ள லுடெயின் மற்றும் அந்தோசியானின்கள் நிறமியை கொண்டிருக்கின்றன.

பிஸ்தா இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். இதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாமம் ஏற்படுவது தடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், பிஸ்தா இரத்த நாளங்களில் கொழுப்புக்கள் தங்குவதைத் தடுத்து, உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதைக் குறைக்கும்.

பிஸ்தாவை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், இளமையைத் தக்க வைக்கலாம். இதற்கு அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் முக்கிய காரணம்.

நீரிழிவு நோய்க்கு உட்பட்டவர்கள் அதை கட்டுக்குள் வைக்க தவறிவிடும் போது பார்வை இழப்பு, சிறுநீரக கோளாறு பிரச்சனைகளுக்கு உள்ளாவது உண்டு பெருமளவு உணவு வழியாக நீரிழிவை கட்டுப்படுத்துவதோடு அல்லாமல் நீரிழிவினால் உண்டாகும் இதர பாதிப்புகளும் வராமல் தடுக்க உதவக்கூடிய உணவுகள் உண்டு அதில் முக்கியமானது பிஸ்தா பருப்புகள்.


ஆய்வு ஒன்றில் டைப் 2 நீரிழிவு நோயாளிகள் 12 வாரம் ஒரு நாளைக்கு இரண்டு முறை பிஸ்தா பருப்பை எடுத்துகொண்ட போது ரத்த சர்க்கரை அளவு 9% வரை குறைக்கப்பட்டது தெரியவந்தது.

எடை குறைப்புக்காக பிஸ்தா சாப்பிட்டவர்களை ஆய்வு செய்ததில் வழக்கமானவர்களை காட்டிலும் இவர்களது இடுப்பு அங்குலம் கணிசமாக குறைந்தது கண்டறியப்பட்டது. பிஸ்தாவில் இருக்கும் நிறைவான புரதம் பசி உணர்வை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது.

பிஸ்தாவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான ஸீக்ஸாத்தைன் மற்றும் லுடீன் போன்றவை உள்ளதால், இவை உடலில உள்ள நச்சுமிக்க பொருட்களை உடலில் இருந்து வெளியேற்றி, புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கும்.

பிஸ்தாக்களில் இருக்கும் வைட்டமின் இ சருமத்தின் வயதான தோற்றத்தை தள்ளிபோட செய்கிறது. பிஸ்தா சருமத்துக்கு ஈரப்பதமூட்டும் பொருளாக செயல்பட்டு சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.