துபாயின் அடையாளமாக விளங்கும் உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா கட்டடம் புத்தாண்டு தினத்தில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
உலகின் மிக உயரமான கட்டிடமாக விளங்கும் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா 828 மீட்டர் உயரம் கொண்டது. இந்த கட்டிடத்தில் சமீபத்தில் வெளியான நவரசா திரைப்படத்தின் போஸ்டர்கள் ஒளிபரப்பானது.
இதுபோல அதிக அளவில் மிக உயரமான கட்டிடங்கள் எல்லாம் துபாயீல் தான் உள்ளன. புர்ஜ் கலீபா கட்டிடம் உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற கின்னஸ் சாதனையை அடைந்துள்ளது.
புர்ஜ் கலிபாவின் உச்சியில் 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைவாக இருக்குமாம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்தக் கட்டிடத்தை பார்க்க வேண்டுமென்றில் முன் கூட்டியே 3500 ரூபாய் கொடுத்து முன் பதிவு செய்ய வேண்டும்.
இக்கட்டிடத்தைக் கட்டும் ஒப்பந்த நிறுவனத்தின் கணக்கொன்றின்படி இதன் உயரம், 818 மீட்டர் (2684 அடி) அளவுக்கு இருக்கக்கூடுமென நம்பப்பட்டது. இதன்படி இதில் அமையும் மாடிகளின் எண்ணிக்கை 162 வரை இருக்கும் எனவும் கணிக்கப்பட்டது. எனினும், இத்திட்டத்துக்கான அதிகாரபூர்வ இணையத் தளத்தில் வெளியிடப்பட்டிருந்த படமொன்றில் காணப்படும் உயரம் 195 எண்ணிக்கைகள் வரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் இறுதி உயரம் 940 மீட்டராக (3084 அடி) இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.