மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் EQS மாடலினை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. தற்போது இந்த எலெக்ட்ரிக் மாடலுக்கான உற்பத்தி பேக்டரி 56 ஆலையில் துவங்கி இருக்கிறது. இந்த ஆலை ஜெர்மனியில் அமைந்துள்ளது. பென்ஸ் ICE, எஸ் கிளாஸ் மாடல்களுடன் புதிய எலெக்ட்ரிக் EQS மாடலும் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதுவரை இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார்கள் வரிசை கட்டி வரும் நிலையில், அதிக சொகுசான எலெக்ட்ரிக் காரை விரும்பும் பெரும் கோடீஸ்வர வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும்.
இந்த கார் எலெக்ட்ரிக் கார்களுக்காக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் உருவாக்கி புதிய கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காரின் லாங் வீல் பேஸ் மாடல் அளவுக்கு உட்புறத்தில் மிக தாராளமான இடவசதியை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
புதிய பென்ஸ் EQS 450 பிளஸ் மற்றும் 580 4மேடிக் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை முறையே 328 பிஹெச்பி பவர், 568 என்எம் டார்க் மற்றும் 516 பிஹெச்பி பவர், 855 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகின்றன. இந்த கார் மெர்சிடிஸ் இந்தியா வலைதளத்திலும் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் எலெக்ட்ரிக் காரின் இரண்டு வேரியண்ட்டுகளிலுமே 107.8kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 770 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்டுகிறது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஎஸ் எலெக்ட்ரிக் கார் ரூ.2 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. அந்த வகையில், இந்த மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
பல ஏர்பேக்குகள், ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப்பிங் அசிஸ்ட் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள். Mercedes-Benz EQS பல்வேறு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது, மேலும் பிராந்தியம் மற்றும் மாடல் ஆண்டைப் பொறுத்து கிடைக்கும் தன்மை மாறுபடலாம்.