2022 ஐபிஎல் ஏலத்திற்கான அதிகாரப்பூர்வ தேதி மற்றும் நேர அட்டவணை அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மற்றும் நாளை பெங்களூரில் ஏலம் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. அதே போல ஐபிஎல் ஏலம் நடைபெறும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த ஏலம் காலை 11 மணி முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. இந்த வருடம் முதல் விவோவில் இருந்து டாடா ஐபிஎல் போட்டிகளை வழங்குகிறது. 2022 சீசனில் இருந்து டாடா ஐபிஎல் என அழைக்கப்பட உள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடர், அக்டோபர் 15-ம் தேதி வரை நடக்க வாய்ப்பிருப்பதாக அறிவிப்புகள் வெளியானது.
ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளன. புதிதாக சேர்க்கப்படும் இரு அணிகளுக்கான போட்டியில், அகமதாபாத், பூனே, லக்னோ, கான்பூர், கெளஹாத்தி, இந்தோர், கொச்சி, ராய்பூர், திருவணந்தபுரம் ஆகிய நகரங்களைச் சேர்ந்த அணிகள் போட்டியிடுகின்றன.
மெகா ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்கள் பட்டியலை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. மொத்தம் 1214 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 590 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என தெரிவித்தது. அந்த 590 வீரர்களில் 228 பேர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற வீரர்கள் என்றும், 355 பேர் உள்ளூர் போட்டிகளில் மட்டும் பங்கேற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 7 பேர் அண்டை நாடு என்ற அடிப்படையில் மெகா ஏலத்தில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 370 இந்தியர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் இருக்கிறார்கள். மேலும், ஒவ்வொரு அணியும் வீரர்களுக்கு அளிக்கும் மொத்த ‘சாலரி பர்ஸ்’ லிமிட், 85 கோடி ரூபாயில் இருந்து 90 கோடி ரூபாயாக அதிகரிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.