கடந்த மாதம் ஜனவரி 29 ஆம் தேதி அன்று சூரியனின் வெளிப்புற அடுக்கின் மேற்பரப்பில் இருந்து கரோனல் மாஸ் எஜெக்ஷன் (CME) என்ற ஒரு மாபெரும் உமிழ்வு வெளியேற்றப்பட்டுள்ளது. இதன் விளைவாக அதிவேக சூரியக் காற்று சூரியனில் இருந்து வெளியிடப்பட்டது. இது பூமியின் வளிமண்டலத்தைத் தாக்கி புதிய புவி காந்தப் புயலை உருவாக்கியுள்ளது.
சூரியனின் வெளிப்புற அடுக்கின் மேற்பரப்பில் இருந்து கரோனல் மாஸ் எஜெக்ஷன் (CME) ஆனது பிப்ரவரி 3 ஆம் தேதி தான் பூமிக்கு வந்தடைந்துள்ளது. இந்த சூரியப் புயல், பூமியின் வளிமண்டலத்தில் மோதியபோது, பூமியின் தரையில் உறுமியது என்று கூறப்பட்டுள்ளது.
தீவிரமான சூரிய புயல்கள் பெரும்பாலும் விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களை அழிக்கக் கூடியதாகக் கருதப்படுகிறது.தீவிரமான சூரியப் புயல்கள் பூமியில் உள்ள மின் கட்டங்களை நாக் அவுட் செய்யக் கூடியது மற்றும் உலகளவில் இணையத்தைத் துண்டிக்க கூடியதாக இருக்கிறது.
இருப்பினும், இம்முறை ஏற்பட்ட சூரிய புயல் மிகவும் அழிவுகரமான விளைவை ஒரு சில பகுதியில் மட்டும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சூரிய புயல் ரேடியோ இருட்டடிப்பு விளைவை ஏற்படுத்தியுள்ளது.இதனால், ரஷ்யா பகுதியில் உள்ள ரேடியோ சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டு மிகவும் கடுமையான விளைவுகள் ஏற்பட்டுள்ளது.
கரோனல் மாஸ் எஜெக்ஷன்கள் சூரியனை விட்டு வெளியேறும்போது, அவை வினாடிக்கு 250 கிலோமீட்டருக்கும் குறைவான வேகத்தில் வினாடிக்கு 3000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கின்றன.
ஆபரேட்டர்கள் மற்றும் ஜிபிஎஸ் பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.!"