இந்தியன் பிரீமியர் லீக் 2022 மெகா ஏலத்திற்கு (IPL Mega Auction) முன்னதாக ரூ. 2 கோடி ரூபாய் என்ற அதிகபட்ச அடிப்படை விலையைத் தேர்ந்தெடுத்த சில முன்னணி வீரர்களைப் பற்றிய தகவல்கள்.
ககிசோ ரபாடா:
ககிசோ ரபாடா இதுவரை 27 டெஸ்ட் போட்டியில் விளையாடி 124 விக்கெட்களை எடுத்துள்ளார். அதேபோல 50 ஓவர் கிரிக்கெட்டில் 48 போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டும், 16 டி-20 போட்டியில் விளையாடி 22 விக்கெட்களை எடுத்துள்ளார். ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா பஞ்சாப் அணிக்காக தேர்வு செய்யப்பட்டு ஆரம்ப விலையாக ரூ. 2.00 கோடி நிர்ணயிக்கப்பட்டு தற்போது ரூ. 9.25 கோடியாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயர்:
2020ல் டெல்லி கேபிடல்ஸை லீக் இறுதிப் போட்டிக்கு கொண்டு சென்ற முதல் கேப்டன் என்ற பெருமைப் பெற்ற ஷ்ரேயாஸ் ஐயர், மொத்தம் 87 ஐபிஎல் போட்டிகளில் 2375 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் கொல்கத்தா அணிக்காக தேர்வு செய்யப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஆரம்ப விலையாக ரூ. 2.00 கோடி நிர்ணயிக்கப்பட்டு தற்போது ரூ. 12.25 கோடியாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரவிச்சந்திரன் அஸ்வின்:
சிறந்த தலைமைப் பண்புகளைக் கொண்டுள்ள அஸ்வின், 167 ஐபிஎல் போட்டிகளில் 145 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர் அஸ்வின் சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவராக இருக்கிறார். ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் ராஜஸ்தான் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஆரம்ப விலையாக ரூ. 2.00 கோடி நிர்ணயிக்கப்பட்டு தற்போது ரூ. 5.00 கோடியாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஷிகர் தவான்:
இந்திய வீரரான ஷிகர் தவான் பல ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ரன் குவித்து வருகிறார். கடந்த சீசனில் 16 ஆட்டங்களில் 587 ரன்கள் குவித்தார் ஷிகர் தவான். ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பஞ்சாப் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட ஷிகர் தவானுக்கு ஆரம்ப விலையாக ரூ. 2.00 கோடி நிர்ணயிக்கப்பட்டு தற்போது ரூ. 8.25 கோடியாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
டேவிட் வார்னர்:
ஐபிஎல் வரலாற்றில் 150 ஆட்டங்களில் 41.59 என்ற அற்புதமான சராசரியில் 5449 ரன்கள் குவித்த வார்னர், வெளிநாட்டு வீரர்களில் முன்னணியில் உள்ளார். ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் டெல்லி அணிக்காக தேர்வு செய்யப்பட்ட டேவிட் வார்னருக்கு ஆரம்ப விலையாக ரூ. 2.00 கோடி நிர்ணயிக்கப்பட்டு தற்போது ரூ. 6.25 கோடியாக முடிவு செய்யப்பட்டுள்ளது.