மூக்கடைப்பு முதல் மூச்சிரைப்பு வரை கபம் சார்ந்த பிரச்சனையை சரிசெய்யகூடியது அதிமதுரம். ஆயுர்வேதம் சித்த மருந்துகள் முதல் கைவைத்தியம் வரை அனைத்திலும் இதன் பயன்பாடு உள்ளது.
அதிமதுரம் என்பது குன்றிமணி என்று சொல்லகூடிய செடியின் வேர். சுவையிலும் இவற்றுக்கு குறைவில்லை. நல்ல இனிப்பு கொண்ட பொருள் இது வெள்ளை சர்க்கரை இனிப்பு போல் அல்லாமல் இனிப்பிலும் ஒரு தனிசுவை இருக்கிறது என்பதை உணர்த்தும் இது.
நாவறட்சி இருப்பவர்களுக்கு உமிழ்நீர் சுரப்பு குறையும். இவர்கள் அதிமதுரத்தை சிறிது வாயில் இட்டு சுவைத்தால் அதன் இனிப்பு தொண்டை வரை இறங்கும். தொண்டையிலும் இனிப்பு சுவையை உணர்த்தும் அதிமதுரம் உமிழ்நீரை அதிகரிப்பதால் வறட்சி எட்டி பார்க்காது.இந்த வேரை இனிப்பு வேர் என்றும் அழைக்கிறார்கள்.
உடலில் கபம் அதிகம் இருந்தால் அவை மூச்சு குழாய், சுவாசக்குழாய் போன்றவற்றில் தென்படும். அதை தொடர்ந்து தான் தொண்டை வறட்சி, வறட்டு இருமல், சளி, தொண்டை கரகரப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதிகமாகும் போதுதான் அவை நுரையீரல் வரை சென்று பாதிப்பை உண்டாக்கும். தொண்டை கரகரப்பு இருக்கும் போது அதிமதுரத்தை வாயில் இட்டால் உடனடியாகவே இந்த தொற்று கரையும்.
அதிமதுரம் ஒரு மலமிளக்கி. வழவழப்பாக இருக்கும் என்பதால் மூலநோயின் எரிச்சலை தணிக்கும்.
தொண்டை கரகரப்பு, வறண்ட தொண்டை, இருமல்களை போக்கும், எனவே தான் பெரும்பாலான இருமல் மருந்துகளில் அதிமதுரம் உண்டு.
வாய்ப்புண் இருக்கும் போது பசும்பாலை நன்றாக காய்ச்சி அதுமதுரப்பொடி இனிப்புக்கு பனங்கற்கண்டு சேர்த்து வாயில் சில விநாடி வைத்து வைத்து மெதுவாக விழுங்கினால் வாய்ப்புண்ணுக்கு இதமாக இருக்கும் புண்கள் அதிகரிக்காது. புண்கள் ரணமாகாமல் விரைவில் ஆறும்.
அதிமதுர பொடியை முகத்துக்கு தடவி வந்தால் முகம் பளபளப்பாகிறது. பருக்கள், கரும்புள்ளிகள் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. முகத்தில் தேமல் பிரச்சனைகளையும் தடுக்கும்.
கூந்தல் வளர்ச்சி இல்லாமல் இருந்தால் எருமை பாலில் அதிமதுரத்தை சேர்த்து அரைத்து தலையில் ஸ்கால்ப் பகுதி முதல் வேர் வரை தடவினால் தலையில் கூந்தலில் இருக்கும் பிரச்சனைகள் அதிமதுரத்தால் அடியோடு நீங்கும்.
இதில் உள்ள glabridin தோலில் உள்ள திசுக்களுக்கு வலு தருகிறது. கண்களுக்கு கீழே உள்ள கருவளையத்தை நீக்குகிறது. தோல் சுருக்கங்களை நீக்குகிறது.