ஸ்பைருலினாவைப் பற்றி விளம்பரங்களில் பெரும்பாலும் பாத்திருப்பீர்கள். டயட்டை குறைக்கும் மாத்திரை வகைகளில் விளம்பரங்களில் ஸ்பைருலினாவைப் பற்றி பேச்சு வராமல் இருக்காது.ஸ்பைரூலினா என்பது ஒரு செல் புரத பாசி வகையைச் சேர்ந்தது.
ஸ்பைரூலினாவில் பச்சையம் அதிகம் உள்ளது. அதனால் தான் இது பச்சை நிறத்தில் உள்ளது. மேலும் இது இந்தியா, ஆப்ரிக்கா, மெக்ஸிகோ, இலங்கை போன்ற வெப்பமான பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் அதிகம் வளரக்கூடிய பாசி. இதனை மீன்கள் சாப்பிடுவதால் தான், மீன்களில் புரோட்டீன் சத்துக்கள் அதிகம் உள்ளன.
ஸ்பைரூலினாவில் 60-70 சதவீத புரோட்டீன்கள் உள்ளன. அதாவது பால், முட்டை மற்றும் பருப்பு வகைகளை விட அதிகமான அளவிலான புரோட்டீன்கள் ஸ்பைரூலினாவில் உள்ளது. எனவே இதனை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம் புரோட்டீன் குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படுவதோடு, முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
ஆய்வுகளில் ஸ்பைரூலினாவில் அனைத்து வகையான அமினோ அமிலங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த அமினோ அமிலங்கள் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
உடலில் இருந்து டாக்ஸின்கள் வெளியேறிவிட்டால் தானாக நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்தால், உடலைத் தாக்கும் கிருமிகளில் இருந்து உடல் பாதுகாப்புடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கும்.
இது ஜீரண என்சைம்களை கொண்டுள்ளது. ஆகவே அஜீரணப் பிரச்சனை இருப்பவர்கள் எடுத்துக் கொள்வது நல்லது. இதில் கொழுப்பு இல்லாததால் எளிதில் செரிக்கப்படுகிறது.
உடல் எடை கூடிக் கொண்டே போகிறவர்களுக்கு சிறந்த டயட்டாக ஸ்பிருலினாவை சொல்லலாம். இது உடலில் இருக்கும் கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகிறது.
ரத்த சோகையால பாதிக்கப்பட்டவர்கள் ஸ்பைருலினாவை சாப்பிட பரிந்துரை செய்யப்படுகிறது. நச்சுக்களை வெளியேற்றுகிறது. ரத்தம் மற்றும் இதர உடல் உறுப்புகளை சுத்தகரிக்க தூண்டுகிறது.
ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ், மூட்டு வலி போன்றவை வராமல் காக்கவும், வந்த பின் குணப்படுத்தவும் ஸ்பைருலினா மருந்தாக பயன்படுகிறது. மூட்டு வீக்கங்களை சரிப்படுத்துகிறது.
நீரிழிவு நோயாளிகள் வெறும் வயிற்றில் ஸ்பைரூலினாவை எடுத்தால், 6 வாரத்தில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.
அடிக்கடி சளி, காய்ச்சல் என அவதிப்படுபவர்கள் இதனை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். நல்ல நினைவுத் திறனையும் பெற உதவுகிறது.