கோவக்காயில் இவ்வளவு நன்மைகளா?

 உணவே மருந்து என்று சொல்லகூடியவற்றில் கோவக்காய் சிறந்தது. இது அனைத்து இடங்களிலும் எளிதாக கிடைக்க கூடிய ஒன்று. கைவைத்தியத்தில் கோவக்காய் இலை, அதன் சாறு போன்றவை இன்றும் கிராமங்களில் பயன்படுத்தப்படுகிறது.


நமது ரத்தத்தில் இரும்பு சத்து அதிகம் இருந்தால் நம்மால் சுலபத்தில் சோர்வடையாமல் உழைக்க முடியும். கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்ட நேரம் செயலாற்றும் திறன் ஏற்படுகிறது.

தண்ணீர் அதிகம் அருந்தாமை, உப்பு தன்மை அதிகமாக இருக்கும் நீர் அருந்துவது, நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது குடிப்பது போன்ற காரணங்களால் இன்று பலருக்கும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. கோவக்காய் அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும்

நீரிழிவு இருப்பவர்களுக்கு கோவக்காய் சிறந்த உணவு என்று ஆய்வுகள் சுட்டிகட்டுகிறது. நீரிழிவு சிகிச்சையில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் 90 நாட்களுக்கு தினமும் 100 கிராம் அளவு கோவக்காய் சாறு எடுத்துகொண்டவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு மருந்துகளை காட்டிலும் 16% குறைந்தது தெரியவந்தது.

கோவக்காயில் இருக்கும் ஆன் டி கார்சினோஜெனிக் விளைவுகள் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த கோவக்காய் சாப்பிடுவதால் உடலில் பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றுகளும் வராமல் தடுக்கிறது.

உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், உடலுக்கு தேவையான பல சத்துகள் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய கோவக்காய் பதார்த்தங்களை உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் அளிக்கும்.


நமது உடலில் இருக்கும் கோடிக்கணக்கான செல்கள் அனைத்துமே நாம் சாப்பிடும் உணவுகளில் இருந்தே சக்தி பெறுகின்றன. கோவக்காயில் பல சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. இதிலுள்ள மூலப்பொருட்கள் உடல்செல்களின் வளர்சிதை மாற்றத்திறனை சமநிலைப்படுத்தி, உடலின் சீரான இயக்கத்திற்கும், உடல் நலத்திற்கும் உதவுகிறது.

ஒரு வயதிற்கு மேலே அனைவருக்கும் உடலில் இருக்கும் நரம்புகளில் இறுக்கத்தன்மை ஏற்டுகிறது. இதய நலத்திற்கும் பொட்டாசியம் சத்து தேவையாக இருக்கிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர கோவக்காயில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது. இதய நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க கோவக்காய்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

சிலருக்கு கல்லீரலில் அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இந்த பிரச்னையை சரி செய்வதில் கோவைக்காய் ஒரு சிறந்த இயற்கை மருத்துவ உணவாக இருக்கிறது. வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை கோவக்காய் சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் நீங்கி கல்லீரல் வீக்கம் குணமாகிறது.

கோவக்காய் உடலின் மொத்த அமிலத்தன்மையை குறைத்து வயிற்றில் அல்சர் அறிகுறியை குறைக்கிறது. இரைப்பை சுரப்பு அமிலத்தில் பி ஹெச் மற்றும் புண் ஏற்படுவதை குறைக்க செய்கிறது என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளது.