சித்தர்களால் கண்டு பிடிக்கப்பட்ட சித்த மருத்துவத்தின் சில எளிமையான மருத்துவ முறைகளை நமது முன்னோர்கள் தங்களின் வீட்டில் அவசர கால மருத்துவ முறையாக பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இவற்றில் பல அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைளும் அதிகம் இடம்பெற்றிருந்தன. அதில் மிகவும் பிரபலமான ஒரு வீட்டு வைத்திய மூலிகையாக “வசம்பு” இருந்திருக்கிறது.
பழங்காலத்தில் பிறந்து 1 வயது வரை இருக்கும் குழந்தைகளுக்கு சிறிதளவு வசம்பை தேனில் குழைத்து கை குழந்தைகளின் நாக்கில் தடவி விடும் பழக்கத்தை அதிகம் மேற்கொண்டனர். இப்படி செய்வதால் சிறு குழந்தைகளுக்கு சீக்கிரமாக பேச்சு திறன் கைவரப்பெறுவதோடு உணவில் இருக்கும் நச்சுகளால் எந்த பாதிப்புகளும் ஏற்படாமல் தடுக்கும் ஒரு நச்சு முறிப்பான் மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.
குறிப்பாக எத்தனைய கொடிய விஷத்தையும் வசம்பு போக்கிவிடும். இதை தூள் செய்து, தேனில் 2 ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் தொற்று நோய்கள் நீங்கும். விஷம் அருந்தியவர்களுக்கு 3 ஸ்பூன் வசம்புவை கொடுத்தால், விஷம் முழுக்க வெளியே வந்துவிடும்.
வயிற்றில் பூச்சி தொல்லைகள், வாயு கோளாறுகள், உப்பசம் மற்றும் அஜீரணம் ஆகிய அனைத்து பிரச்சனைகளுக்கும் வசம்பை நன்றாக நசுக்கி, அதை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆறிய பின்பு அருந்தினால் வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும்.
வசம்பு ஜலதோஷ தொல்லைக்கு சிறந்த நிவாரணமாக இருக்கிறது. கால் ஸ்பூன் அளவு வசம்பை வெந்நீரில் கலந்து பருகி வந்தால் ஜலதோஷம் மற்றும் தொண்டைகட்டு போன்றவை சீக்கிரத்தில் குணமாகும்.
கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கும், தலைமுடிகளை முறையாக பராமரிக்காதவர்களுக்கும் பொடுகு தொல்லை ஏற்படுவது வாடிக்கையானது தான். பொடுகு தொல்லைக்கு சிறந்த இயற்கை மருந்தாக வசம்பு இருக்கிறது. நசுக்கிய வசம்பு, சிறிதளவு வேப்பிலைகள் ஆகியவற்றை தேங்காய் எண்ணையில் கொதிக்க வைத்து, ஆற வைத்து அந்த எண்ணையை தலைக்கு தடவி வந்தால் பொடுகு தொல்லை சீக்கிரம் குணமாகும்.
வாதம் உடலில் அதிகரிக்கும் போது உடலின் மூட்டு பகுதிகள் அனைத்தும் விரைத்து கொண்டு, வலியை ஏற்படுத்த கூடியதாக இருக்கிறது. வாதத்தில் குறிப்பாக கீல்வாதம் எனப்படும் வாத நோய் மிகவும் கஷ்டங்களை கொடுக்க கூடியதாக இருக்கிறது. வசம்பை காசி கட்டியுடன் சேர்த்து சிறிது நீர்விட்டு நன்கு அரைத்து மூட்டு பகுதிகளில் தடவி வந்தால் வாதம், கீல்வாதம் போன்ற அனைத்து பிரச்னைகளும் குணமாகும்.
வசம்பு உடன் சுடான தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம். எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அனைவரும் வீட்டில் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.
வசம்புடன் திரிகடுகு, பெருங்காயம், அதிமதுரம், கடுக்காய் தோல், கருப்பு உப்பு ஆகியவற்றில் சிறிதளவு சேர்த்து, நன்கு இடித்து பொடியாக்கி ஒரு தேக்கரண்டி பொடியை பாலில் கலந்து காலை மாலை என இருவேளையும் காக்கை வலிப்பு ஏற்படுபவர்களுக்கு கொடுத்து வந்தால் சிறந்த நிவாரணம் கிடைக்கும். மன நிலை பாதிப்பு கொண்டவர்களுக்கு கொடுத்து வர சித்தம் தெளியும்.