ஜிடிபி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

ஜிடிபி என்பது குறிப்பிட்ட நிலப்பரப்பில் அல்லது நாட்டில் குறிப்பிட்ட கால இடைவெளியில் கணக்கிடப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (gross domestic product) ஆகும். இதன் மூலம் ஒரு நாட்டின் பொருளாதாரம் கணக்கிடப்படுகிறது. அந்த நாட்டின் பொருளாதாரம் குறிப்பிட்ட காலகட்டத்தில் அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்பதைக் கண்டறியவும் அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடப்படும். இதன்மூலம் பணவீக்கம் மற்றும் பண மதிப்பு அதிகரித்துள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளமுடியும்.


ஜிடிபி ஏன் அவ்வளவு முக்கியம்? குடிமக்கள், பொருளாதார வல்லுநர்கள், அரசியல்வாதிகள், முதலீட்டாளர்கள் மற்றும் வணிகங்கள் கூட நேரிடையாக ஜிடிபியால் பாதிக்கப்படுகின்றன. இந்த அளவு குறியீட்டை கொண்டுதான் அரசு போதுமான வேகத்தில் வளராத பொருளாதாரத்தை ஊக்குவிக்க மேலும் பணத்தை முதலீடு செய்யலாமா, வேண்டாமா என முடிவெடுக்கப்படும். வணிகத்தில், ஜிடிபியை கருத்தில் கொண்டு, உற்பத்தி மற்றும் சேவை செயல்பாடுகளை விரிவுபடுத்தலாமா என முடிவுசெய்யப்படும். முதலீட்டாளர்களும் கூட, முதலீடு சம்பந்தமான முடிவுகளை , இதைப் பார்த்தே எடுப்பார்கள்.

இந்தியாவில் மத்திய புள்ளியியல் துறை அலுவலகம் ஜிடிபி-யை கணக்கிடுகிறது. இது, புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இது தகவல்களைத் திரட்டி, புள்ளிவிவர ஆவணங்களாகப் பராமரிக்கிறது.

இந்தியாவின் ஜிடிபி-யை கணிக்கிடும் முறை

 இந்தியாவில் நான்கு முறைகளில் ஜிடிபி கணக்கிடப்படுகிறது.

 1) காரணி விலையைப் பொறுத்து (At factor cost) - பொருளாதார நடவடிக்கைகளைப் பொறுத்து 

2) சந்தை விலையைப் பொறுத்து (At market price) - செலவுகளைப் பொறுத்து 

3) பெயரளவிலான ஜிடிபி (Nominal GDP) - நடப்பு சந்தை விலையைப் பொறுத்து

 4) உண்மையான ஜிடிபி (Real GDP)- பணவீக்கத்தைப் பொறுத்து 

இந்த நான்கு முறைகளிலும் ஜிடிபி வெளியிடப்படும். ஆனால் காரணி விலை என்பது, ஊடகங்களால் சொல்லப்படுவது.

8 துறைகள் ஜிடிபி கணக்கிட கருத்தில் கொள்ளபடுகின்றன. விவசாயம், வனம் மற்றும் மீன்வளத்துறை 

சுரங்கம் மற்றும் குவாரிகள் 

உற்பத்தித் துறை 

மின்சாரம், எரிவாயு, குடிநீர் விநியோகம் மற்றும் இதர சேவைகள் 

கட்டுமானம்

 வர்த்தகம், உணவுவிடுதி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்புச் சேவைகள்

 நிதி, வீட்டுமனை, தொழில்முறை சேவைகள் 

பொது நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் இதர சேவைகள்


இந்திய ஜிடிபி-யானது, காலாண்டு, ஆண்டுக்கொரு முறை எனக் கணக்கிடப்படுகிறது. அதன் அறிக்கைகள் 2 மாத இடைவெளியில் வெளியிடப்படும். உதாரணமாக, டிசம்பரில் முடிந்த காலாண்டின் அறிக்கை பிப்ரவரி மாதம் வெளியாகும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாமினல் ஜிடிபி, ரியல் ஜிடிபி என்று இரண்டு வகை உள்ளன. இதில் நாமினல் ஜிடிபி மற்றும் ரியல் ஜிடிபி என்பது ஒரு ஆண்டிற்கும், அதை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் மற்றொரு ஆண்டிற்கும் இடையேயான பண மதிப்பை மட்டும் கணக்கிடுவதாகும்.

நுகர்வு + முதலீடு + அரச செலவினங்கள் + (ஏற்றுமதி - இறக்குமதி) என்ற முறையில் நம் இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடப்படுகிறது.