மனிதன் இனம் தொடங்கிய காலத்தில் இருந்தே இன்றுவரை தன்னுடைய அடிப்படை தேவைகளில் பல மாற்றத்தை உள்நிறுத்தி பரிணமித்துக்கொண்டே வருகிறது. இதில் உணவு முறைகள் மிகுந்த பங்குவகிக்கிறது.நாகரிக வளர்ச்சி தொடர்ந்து நகர்ந்துக்கொண்டிருக்கும் இந்தகாலத்தில் மனிதர்களுடைய உணவு முறை பெரிதும் மாற்றத்தை கண்டுக்கொண்டது. இதன் விளைவாக மனிதர்களுக்கு உடல்பருமன் ஏற்படுகிறது.
இந்த உடல் பருமனை குறைக்க (Weight loss) பலவிதமான உடற்பயிற்சிகளையும், விரத முறைகளையும் செய்கிறார்கள். இது போன்ற உடல் எடை குறைக்கும் முறைகளில் மிகவும் பிரபலமாக அறியப்படும் முறைகளில் ஒன்றுதான் keto diet.
Keto diet என்று சொல்லும் பொழுது, இது ஒரு low carb diet என்று சொல்லுகிறார்கள். அதாவது பொதுவாக நம் உடலானது இயங்குவதற்கு முக்கியமான இரண்டு வகையான எரிபொருள்கள் தேவைப்படுகிறது. ஒன்று கார்போஹைட்ரேட்(Carbohydrate), கொழுப்பு (fat) மற்றொன்று புரதம் (protein).
இவைகளில் இருந்துதான் உங்கள் உடம்பிற்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது. எனவே, நீங்கள் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் Carbohydrate அளவு குறைவாக இருந்து கொழுப்பின் அளவு அதிகமாக இருந்தால் அது Keto Diet அல்லது Ketogenic Diet அல்லது Low carb diet.
கீட்டோசிஸ்:
ஒரு நாளில் குறைந்தது 50 கிராம் கார்போஹைட்ரேட் உட்கொண்டால் அது உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்காது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். அதனால் உடலானது கொழுப்பு மற்றும் புரதத்தை எரித்து உடலின் இயக்கத்துக்கு தேவையான சக்தியைக் கொடுக்கிறது. இதனால் குறுகிய காலகட்டத்திலேயே அதிக அளவில் உடல் எடை குறையும்.
யார் இந்த டயட்டை பின்பற்றலாம்?
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களே பெருமளவில் இந்த டயட்டைப் பின்பற்றுகிறார்கள். ஆனால் இது வலிப்பு நோய்க்குத் தீர்வாக அமையும். இதய நோய், மூளை சம்பந்தப்பட்ட நோய், பருக்கள் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். டைப் 1 நீரிழவு நோய் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனையுடன் இந்த கீட்டோஜெனிக் டயட்டைப் பின்பற்றலாம்.
வயது, பாலினம் பொறுத்து எடுத்துக்கொள்ளும் உணவின் அளவும் மாறுபடும். எந்த டயட்டை பின்பற்றுவதற்கு முன்பும் நம் உடலின் தன்மை மற்றும் பிரச்னைகளை மருத்துவரிடம் எடுத்துச்சொல்லி உடலுக்கு ஏற்றபடி உணவின் அளவு தெரிந்து பின்பற்றுவது நல்லது.
கீட்டோ டயட்டின் நன்மைகள்:
சர்க்கரை நோய் இருப்பவர்கள் இந்த keto diet எடுத்துக்கொள்வதன் மூலம் அவர்களின் insulin அளவு குறைய வாய்பிருக்கிறது. இதனால் சர்க்கரை நோயில் இருந்து விடுபடுவார்கள்.
keto diet cancer நோயை குணபடுத்தும் என்றும் நிருபிக்கபடுகிறது, அதாவது உடல் வளர்ச்சிக்கு முக்கியமான தேவைகளில் ஒன்றான insulin அளவு குறைவதால், cancer செல்களும் வளர்ந்து பெருகுவது குறைக்கிறது.
keto diet மிக முக்கியமாக எல்லோரும் தேர்ந்தெடுப்பதன் காரணம் weight loss, நம் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
நம் மூளை வேகமாக செயல்படவும் என்றும் சுருசுருப்பாக இருக்கவும் keto diet உதவுகிறது.
keto diet தொடர்ந்து செய்பவர்களுக்கு வயிற்று தொப்பை என்பதே வராது.நாம் என்றும் இளமையாக இருப்பதற்கும் keto diet உதவுகிறது.
உணவு முறைகள்:
keto diet செய்பவர்களுக்கு முட்டை ஒரு சரியான உணவு. காரணம், இதில் ஒரு முழு முட்டையில் 6 கிராம் Protein, Carbohydrate குறைந்த அளவு, Fat அதிகமான அளவு உள்ளது. முட்டை எப்பொழுதும் புரதசத்திற்க்கு பேர்போன ஒரு உணவு, அதனால் இது keto diet தேவையான சத்துக்களை கொண்டிருக்கிறது.
100 கிராம் கோழி இறைச்சியில் 25 கிராம் புரதச் சத்து இருக்கிறது. இதில் அதிகப்படியான Cholesterol இருப்பதனால், போதுமான அளவு சரிவர எடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்த அளவு கோழியின் கால் பகுதியை உண்ணுங்கள், ஏனென்றால் அந்த பகுதியில் போதுமான அளவு Fat, குறைந்த அளவு கர்போஹைட்ரேட் இருக்கும்.
காய்கறிகள் என்றால் எல்லா வகையான காய்கறிகளையும் எடுத்துக்கொள்ளகூடாது, நார்சத்து, வைட்டமின்ஸ், அதிகம் உள்ள புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கும் உணவையும் உண்ண வேண்டும். இப்படி சாப்பிடுவதன் மூலம் உடலில் fat சேராது, வேகமாக குறைந்து போகும்.
keto diet யில் தவிர்க்க முடியாத ஒரு உணவு மீன், மீனில் அதிக அளவு கொழுப்பு சத்து இருக்கிறது. போதுமான அளவு வைட்டமின், Protein இதில் இருக்கிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் மீன் சாப்பிடுவதன் மூலம் Insulin அளவு குறைகிறது. மற்றொரு முக்கியமான ஒன்று இதில் கர்போஹைட்ரேட் என்பதே கிடையாது. இதனால் கொழுப்பை கரைக்க மீன் உணவு உதவி செய்யும்.