விளக்கெண்ணெயின் நன்மைகள்

விளக்கெண்ணெய் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே பயன்பட்டு வரும் ஒரு மூலிகை பொக்கிஷம் என்றே கூறலாம். காரணம் இதில் இல்லாத நன்மைகளே இல்லை எனலாம். பயன்படுத்த பயன்படுத்த ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுக்க கூடியது. இந்த மருத்துவ குணம் வாய்ந்த எண்ணெய் ஆமணக்கு செடியில் இருந்து பெறப்படுகிறது.


இதில் ஆன்டி மைக்ரோபியல், அலற்சி எதிர்ப்பு பண்புகள், மலமிளக்கி தன்மை இருப்பதால் எல்லாத் துறைகளிலும் பயன்படுகிறது. அதனால் தான் இதை அழகு சாதனப் பொருட்கள், ஷாம்பு, கண்களுக்கு மருந்தாக விளக்கெண்ணெய்யை பயன்படுத்தி வருகின்றனர். 

நம்முடைய முன்னோர்கள் விளக்கெண்ணையை பல உடல் நலப் பிரச்சினைகளுக்கான தீர்வாகப் பயன்படுத்துகிறார்கள். அதிலும் உடலைச் சுத்தம் செய்வதற்கும், உடல் சூட்டைத் தணிப்பதற்கும் முதல் கருவியாக விளக்கெண்ணெயைத் தான் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

நன்மைகள்:

ஆமணக்கு இலை, வாத நோயாளிகளுக்குச் சிறப்பான மருந்து. ஆமணக்கு இலையை, விளக்கெண்ணெயிலேயே லேசாக வதக்கி, மூட்டுகளின் வீக்கம், வலிக்கு ஒத்தடம் இட்டால் வலி நீங்கும்; வீக்கம் வடியும். 

சமீபத்திய ஆய்வுகள் ஆமணக்கு இலை, கல்லீரல் நோய்க்கு எதிராகச் செயல்படுவதை உறுதிப்படுத்தியுள்ளன. காமாலை, கல்லீரல் சுருக்க நோய், கல்லீரல் செயல்திறன் குறைவுக்கு ஆமணக்கு இலையின் உலர்ந்த பொடி பயனளிக்கும். 

நம் சருமம் வயதாக முக்கிய காரணம் சருமத்தில் உள்ள செல்கள் பாதிப்படைவது தான். இதனால் சரும சுருக்கம், கோடுகள் இவையெல்லாம் வரத் துவங்கின்றன. ஆனால் விளக்கெண்ணெய்யில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சரும செல்கள் பாதிப்படைவதை தடுக்கிறது. 

இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் தழும்புகள் மற்றும் பருக்களை மறைய வைக்க உதவுகிறது. ஒரு சுத்தமான காட்டன் துணியை எடுத்து வெதுவெதுப்பான நீரில் முக்கி அதில் இரண்டு துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி கொள்ளுங்கள். பிறகு காலையில் எழுந்ததும் முகத்தை கழுவி விடுங்கள். இப்படியே செய்து வரும் போது, முகத்தழும்புகள் மறைந்து விடும்.


 

இதிலுள்ள ரிச்சினோச் அமிலம் வலி மற்றும் அழற்சியை போக்க கூடியது. இதனால். எக்ஸிமா, சோரி போன்ற பிரச்சினைகளை களைகிறது. சோரியாஸிஸ் மற்றும் எக்ஸிமா போன்ற வறண்ட சருமத்தால் ஏற்படும் நோயை விளக்கெண்ணெய் மூலம் சருமத்திற்கு ஈரப்பதமூட்டி சரி செய்யலாம். 

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க விளக்கெண்ணெய்யில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் தலையில் இருக்கும் பொடுகு, செபரோகிக் டெர்மார்ட்டிஷ், பிளவுபட்ட கூந்தல் இவற்றை சரி செய்கிறது.