இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

இன்றைய காலகட்டத்தில், பல காரணங்களால், இரத்த தானம் என்பது கட்டாயமாக செய்ய வேண்டிய ஒரு கடமையாக மாறி வருகிறது. இரத்த தானம் செய்வதால் ஒரு உயிரை காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கும் கூட அது பல உடல்நல பயன்களை அளிக்கிறது.


18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள், நல்ல ஆரோக்கியத்துடனும் 50 கிலோவிற்கு மேல் இருந்தால், 450 மி.லி. இரத்தம் அவரை தானமாக கொடுக்கலாம். ஆண்கள் 3 மாதத்திற்கு ஒரு முறை இரத்தம் கொடுக்கலாம். பெண்கள் 4 மாதத்திற்கு ஒரு முறை இரத்தம் கொடுக்கலாம்.

ரத்தம் கொடுப்பதற்கு முன்னர், ரத்தப் பிரிவு, ரத்த அழுத்தத்தின் அளவு, உடலின் வெப்பநிலை மற்றும் ஹீமோகுளோபின் போன்றவை பரிசோதிக்கப்படும்.

ரத்த தானத்துக்குப் பின்னர், டெங்கு, மலேரியா, டைஃபாய்டு, ஹெப்படைட்டிஸ், எச்.ஐ.வி., எய்ட்ஸ் போன்றவை உள்ளனவா எனப் பரிசோதிக்கப்படும்.பரிசோதனையின் முடிவுகளைப் பொறுத்து அவற்றின் பயன்பாடுகள் மாறும்.

ரத்த தானம் செய்வதால் பலன் பெறுவது மற்றவர் மட்டுமல்ல... நாமும்தான். உடலில் இயற்கையாகப் புதிய ரத்தம் உற்பத்தியாகும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க உதவும். 

சீரான இடைவேளையில் இரத்த தானம் செய்தால், உடலில் உள்ள இரும்புச்சத்தின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் ஹார்ட் அட்டாக் ஏற்படாமல் இருக்கும்.

கொழுப்புச்சத்து மற்றும் கலோரிகளை அதிகளவில் எரிக்க உதவும். மேலும் உடலின் ஒட்டுமொத்த கட்டமைப்பை மேம்படுத்த உதவும்.


மாதவிடாய்க் காலங்களில், கர்ப்பக் காலங்களில் உள்ள பெண்கள் செய்யக் கூடாது.பாலூட்டும் தாய்மார்கள் செய்யக் கூடாது.

மது அருந்தியவர்கள், புகைப் பழக்கம் உள்ளவர்கள் செய்யக் கூடாது.ஏதேனும் தொற்றுநோய் உள்ளவர்கள், காய்ச்சலில் இருப்பவர்கள்... என நோய்வாய்ப்பட்டவர்கள் செய்யக் கூடாது.

எய்ட்ஸ், சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், வலிப்பு, அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள் செய்யக் கூடாது.

ரத்தம் கொடுத்த பின்னர், எடை அதிகம் உள்ள பொருள்களைத் தூக்கக் கூடாது. கடுமையான உடற்பயிற்சி செய்யக் கூடாது.

ரத்தம் கொடுத்த அடுத்த 24 மணி நேரத்துக்கு கடினமான செயல்கள் எதுவும் செய்யக் கூடாது. வியர்வையை உண்டாக்கும் செயல்கள், விளையாட்டு, பணி போன்றவற்றைத் தவிர்க்கலாம்.