சூரியகாந்தி விதைகளில் உள்ள அற்புதமான பல நன்மைகள்

சூரிய காந்தி விதைகளில் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஏராளமான ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன. எனவே சூரியகாந்தி எண்ணெய்யைப் போல சூரியகாந்தி விதைகளையும் இனி உணவில் சேர்த்து வரலாம்.இதுவரை சூரியகாந்தி எண்ணெய்யால் மட்டுமே பயன் என்று நினைத்து இருந்தோம். ஆனால் சூரியகாந்தி விதைகளால் கூட ஏராளமான பயன்கள் நமக்கு கிடைக்கின்றன. 


அசுத்தமான காற்றை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டுள்ளதால் சூரியகாந்தி செடியை வீடுகளில் வளர்க்கலாம். சூரியகாந்தி விதையில் செலினியம், மக்னீசியம், தாமிரம், பொட்டாசியம், வைட்டமின் ஈ , வைட்டமின் பி6, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை அடங்கியுள்ளது.100 கிராம் சூரிய காந்தி விதையில் புரதம் 24 கிராம், கொழுப்பு 52 கிராம், ஃபைபர் 100 கிராம், கார்போஹைட்ரேட் 7 கிராம் உள்ளது.


நன்மைகள்:

  • சூரியகாந்தி விதையில் துத்தநாகம், செலினியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சரியாக வேலை செய்ய வைக்கிறது. இதனை தினமும் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
  • சூரிய காந்தி விதைகள் சரும ஆரோக்கியத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. சூரியகாந்தி விதைகளில் ஜிங்க் மற்றும் விட்டமின் ஈ காணப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் சரும செல்களை பாதுகாக்கிறது.
  • சூரியகாந்தி விதைகளில் உடலின் ஹார்மோன் சமநிலையை கட்டுப்படுத்தும் 100 வகையான என்சைம்கள் நிறைந்துள்ளன.குறிப்பாக பெண்களுக்கு, சூரிய காந்தி விதைகளில் உள்ள நொதிகள் பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் உற்பத்தியை சமநிலைப்படுத்துகிறது.இதனால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் முன் நோய்க்குறி, தைராய்டு அறிகுறிகளை நிர்வகிக்க உதவியாக இருக்கிறது.
  • சூரியகாந்தி விதைகளில் காணப்படும் ஏராளமான மக்னீசியம் சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.செல்லுலார் மட்டத்திலிருந்து செயல்படுவதன் மூலமும், கெட்ட கிருமிகளை வேரறுப்பதன் மூலமும் உடம்பில் இருந்து நச்சுத்தன்மையையும் கொலஸ்ட்ராலையும் களைகிறது.கொலஸ்ட்ரால் தேக்கத்தால் தான் நம் வளர்ச்சிதை மாற்றம் சரியாக வேலை செய்வதில்லை.எனவே சூரிய காந்தி விதைகள் கொழுப்புகளை கரைத்து மெட்டா பாலிசத்தை அதிகரிக்கிறது. இதனால் நமக்கு இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

  • சூரிய காந்தி விதைகளில் உள்ள பல மூலக்கூறுகள் டயாபெட்டீஸ் நோயை குறைக்கும் ஆற்றலை கொண்டுள்ளன.மக்கள் 30 கிராம் சூரியகாந்தி விதைகளை எடுத்துக் கொண்டு வந்தாலே போதும் அவர்களின் இரத்த சர்க்கரையை 10 % வரை குறைக்கலாம்.இதிலுள்ள குளோரோஜெனிக் அமிலம் காரணமாக இரத்த சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
  • இதிலுள்ள விட்டமின் ஈ, செலினியம் மற்றும் தாமிரம் போன்ற ஆக்ஸினேற்றிகள் உள்ளன.இவை புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகிறது.
  • சூரியகாந்தி விதைகளில் பொட்டாசியம் வளமாக இருப்பதால் அவற்றை தொடர்ந்து உட்கொள்ளும் போது உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும் ‘கிளைகோஜன்’ அளவை கட்டுக்குள் வைப்பதற்கு சூரிய காந்தி விதை உதவுகிறது.