புதினா குடும்பத்தைச் சேர்ந்த இந்த அதிசய விதையான சப்ஜா விதை பல ஆரோக்கிய நன்மைகளையும், பல நோய்களுக்கும் மருந்தாகி குணப்படுத்த உதவுகிறது.
சப்ஜா விதைகள் மிகவும் கடினமாக இருக்கும் அதனால் அவற்றை நீங்கள் பச்சையாக உட்கொள்ள முடியாது. அவை தண்ணீரில் ஊறவைத்தபின் அதிக அளவிலான ஜெல்லி போன்ற பிசுபிசுப்பு தன்மை இருக்கும் அது ஜெலட்டின் ஆகும். சப்ஜா விதைகள் பொதுவாக இனிப்பு துளசி, ஓசிமம் பெசிலிக்கம் ஆகியவற்றிலிருந்து வருகின்றன, அவை பொதுவாக சுவையூட்டலாகப் பயன்படுத்துகிறோம். அவை இனிப்பு துளசி செடியிலிருந்து வருவதால், அவை பொதுவாக இனிப்பு துளசி விதைகள் என்று குறிப்பிடப்படுகின்றன.
சப்ஜா விதைகளில் புரதம், அத்தியாவசிய கொழுப்புகள், கார்ப்ஸ் போன்றவை உள்ளன, மேலும் அவை நார்ச்சத்து நிறைந்தவை. ஆச்சரியம் என்னவென்றால், அவற்றில் கலோரிகள் இல்லை.
நன்மைகள்:
சப்ஜா விதைகளில் உள்ள ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் நமது உடலின் வளர் சிதை மாற்றத்தை பராமரிக்கின்றன. மேலும், உடல் எடையை குறைக்கும் அத்தியாவசியமான கொழுப்புகளை உருவாக்கும்.
சப்ஜாவில் அதிக அளவில் நார்ச் சத்து நிறைந்துள்ளன. நார்ச்சத்து எப்போதுமே உடல் எடை குறைப்புக்கு உதவி புரியும். அதுமட்டுமின்றி சப்ஜா விதையில் உள்ள பைபர் உங்களின் தேவையற்ற பசியைக் குறைத்து, உங்களை குறைந்த உணவையே உண்ண வைக்கும். பைபர் என்று கூறப்படும் நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் கார்போ ஹைட்ரேட்டுகளை உறிஞ்சுகிறது. இதன் மூலம் அதிக அளவிலான கொழுப்பு கரைவதொடு தேவையற்ற கொழுப்பால் உண்டாகும், உடல் எடையும் குறையும்.
மென்மையான குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் சப்ஜா விதைகள் இயற்கையாகவே உங்கள் உடலை நச்சுத்தன்மை இல்லாததாக செய்கின்றது. இதில் இருக்கும் எண்ணெய் போன்ற தன்மை இரைப்பைக் குழாயிலிருந்து வாயுவை அகற்ற உதவுகிறது மற்றும் வயிற்று சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது.
தேங்காய் எண்ணெயில் நொறுக்கப்பட்ட விதைகளைச் சேர்த்து பாதிக்கப்பட்ட பகுதியில் பயன்படுத்துவதனால் நன்மை ஏற்படும். தோலழற்சி மற்றும் தடிப்புத் தோல் அழற்சி போன்ற தோல் நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் உதவுகிறது. அவற்றை தவறாமல் சாப்பிடுவது உங்கள் உடலில் இருக்கும் கொலாஜனை சுரக்க உதவுகிறது, இது புதிய தோல் செல்களை உருவாக்க தேவைப்படுகிறது.
நீண்ட மற்றும் வலுவான கூந்தலுக்கு தேவையான இரும்பு, வைட்டமின் கே மற்றும் புரதம் நிறைந்திருப்பதால் ஆரோக்கியமான கூந்தலுக்கு சப்ஜா விதைகள் நன்மை பயக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவற்றில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உங்கள் சருமத்திற்கும் கூந்தலுக்கும் பயனளிக்கும்.
மற்றொரு சப்ஜா விதை நன்மை அதன் ஆண்டிஸ்பாஸ்மோடிக் குணம் கொண்டது. இந்த விதைகள் ஸ்பாஸ்மாடிக் தசைகளை ஆற்றும் . ஆண்டிஸ்பாஸ்மோடிக் குணம் இருமலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் அவை உதவுகின்றன.