உடல் ஆரோக்கியம் மேம்பட காய்கறிகள் மிகவும் இன்றியமையாத உணவுப் பொருட்கள். அனைத்து காய்கறிகளும் ஏராளமான சத்துக்களை தன்னுள் அடக்கியுள்ளது. அதில் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் ஓர் காய்கறி என்று சொல்லும் போது அனைவரும் பரிந்துரைப்பது பீட்ரூட்டைத் தான்.
பீட்ருட்டில் உள்ள சத்துக்கள்:
மெக்னீசியம்
பாஸ்பரஸ்
சோடியம்
பொட்டாசியம்
நைட்ரேட்
கால்சியம்
காப்பர்
ஜிங்க்
அயன்
மாங்கனிசு
நன்மைகள்:
- பீட்ரூட் ஜூஸை குடிப்பதன் மூலம், அதில் உள்ள குளுதாதயோன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கல்லீரல் பாதிப்படைவதில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும். மேலும் இந்த ஜூஸைக் குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படும்.
- பீட்ரூட் ஜூஸ் குறைந்த இரத்த அழுத்தத்திற்கு உதவுகிறது. தினமும் 8 அவுன்ஸ் வரை பீட்ரூட் ஜூஸ் குடிப்பவர்களின் சிஸ்டாலிக், டயஸ்டோலிக் போன்ற இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. பீட்ரூட் ஜூஸில் உள்ள நைட்ரேட்ஸ் பொருள் இரத்தத்தில் கலக்கும் போது நைட்ரிக் அமிலமாக மாறுகிறது. இது இரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்கிறது. அதனால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூட சொல்லலாம். தினமும் அல்லது இரண்டு நாளைக்கு ஒரு முறை இந்த பீட்ரூட் ஜூஸை குடித்து வரலாம். உயர் ரத்த அழுத்தம் வேகமாக கட்டுக்குள் வருவதை உங்களால் உணர முடியும்.
- பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது. ஆகவே உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடித்து வாருங்கள். முக்கியமாக இரத்த சோகை உள்ளவர்கள், இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலில் இரத்தத்தின் அளவு வேகமாக அதிகரிக்கும்.
- இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு தசைகளை வலிமை பெறச் செய்யும்.
- டிமெண்ஷியா என்பது மூளைக்கு ரத்த ஓட்டத்தை சீராக எடுத்துச் செல்வது தடைபடுவதால் ஏற்படுகி்ன்ற பிரச்சினை ஆகும். 2011 ஆம் ஆண்டு ஆய்வின் படி வயதானவர்களின் மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க நைட்ரேட்டுகள் உதவுகின்றன. மேலும் நினைவுத் திறன் இழப்பை குறைக்கிறது. பீட்ரூட் ஜூஸ் குடித்த பிறகு மூளையை எம்ஆர்ஐ ஸ்கேன் செய்த போது தெரிய வந்தது என்னவென்றால் முன்பக்க மூளையில் அதிக இரத்த ஓட்டம் பாய்வது தெரிய வந்தது. முன்பக்க மூளை என்பது அறிவாற்றல் சிந்தனை மற்றும் நடத்தை ஆகியவற்றுடன் தொடர்புடையவை. எனவே டிமெண்ஷியாவை தடுக்க குறைக்கு இந்த உயர் நைட்ரேட் திறன் உதவுகின்றன.
- கிருமிகளின் தாக்கத்தினால் உடலினுள் அழற்சி ஏற்பட்டு வீங்க ஆரம்பிக்கும். ஆனால் பீட்ரூட் ஜூஸை ஒரு டம்ளர் தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதனைத் தடுக்கும்.
- பீட்ரூட் ஜூஸ் மிகக் குறைந்த கலோரிகளையே கொண்டுள்ளது. இதில் எந்த வித கொழுப்பு பொருட்களும் இல்லை. இதை காலை ஸ்மூத்தியாக எடுத்துக் கொண்டு வந்தால் போதுமான ஊட்டச்சத்து மற்றும் அந்த நாள் முழுவதும் தேவையான சக்தியை பெறுவீர்கள். அதனால் தேவையில்லாமல் உடலில் தேங்குமு் கொழுப்புகள் தவிர்க்கப் படும். எடை குறைக்க முடியும்.
- பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் ஒன்று புற்றுநோய செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோயைத் தடுக்கும் என்பது. மேலும் ஆய்வுகளிலும் பீட்ருட்டில் புற்றுநோய் எதிர்ப்பு பொருள் அதிகம் உள்ளதால் புற்றுநோய் தடுக்கப்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
- ஃபோலேட் என்பது பி விட்டமின் கொண்டது. இது முதுகெலும்பு பிஃபிடா மற்றும் அனென்ஸ்பாலி போன்ற நரம்புக் குழாய் குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது. இது உங்களுக்கு பிறப்புக் குறைபாடு குழந்தை பிறப்பதை தடுக்கிறது. பீட்ரூட் ஜூஸில் ஃபோலேட் அதிகளவு உள்ளது. எனவே வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏற்ற வகையில் 600 மைக்ரோ கிராம் அளவு நீங்கள் எடுத்துக் கொண்டு குழந்தை வளர்ச்சிக்கு நல்லது.