சப்போட்டா பழத்தின் நன்மைகள்


பழங்களில் அதிக மருத்துவ குணம் மற்றும் சத்துக்கள் நிறைந்து, எளிமையாக எல்லோருக்கும் கிடைக்கும் படியான ஒரு பழம் என்றால் அது சப்போட்டா தான்.சப்போட்டா என்று நன்கு அறியப்பட்ட பழத்தின் மற்றொரு பெயரே சிக்கு என்று அழைக்கப்படுகிறது. மேலும் வெப்ப மண்டலத்தில் எப்போதும் பசுமையான பழங்களை தாங்கியிருக்கும் மரமாக குறிப்பிடப்படுவதும் இதுவே ஆகும். சப்போட்டாவானது மா, பலா மற்றும் வாழை போன்ற பழங்கள் வகையை சேர்ந்த ஒரு ருசியான கலோரிகள் நிறைந்த பழமாக இருக்கிறது.

நன்மைகள்:

  • சப்போட்டா வைட்டமின் ஏ என்னும் சத்தை அதிக அளவு கொண்டுள்ளது மற்றும் ஆராய்ச்சியின் படி, அதிக அளவு வைட்டமின் ஏ-யினால் வயதான காலத்திலும் கூட, பார்வையை மேம்படுத்த உதவுகிறது. எனவே நல்ல பார்வை கிடைப்பதற்கு சப்போட்டா பழங்களை சாப்பிட முயற்சிக்க வேண்டும்.
  • சப்போட்டாவில் குளுக்கோஸ் அதிக அளவு நிறைந்திருப்பதால், அது உடலுக்கு உடனடி ஆற்றலைக் கொடுக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது, அதனால் சப்போட்டா பழத்தை அதிகம் சாப்பிடுவது நல்லது.

  • டானின் அதிக அளவில் நிறைந்து இருப்பதால், சப்போட்டா அல்லது சிக்கு ஒரு முக்கியமான அழற்சி எதிர்ப்பு ஏஜெண்ட் ஆகும். வேறு வார்த்தைகளில் சொன்னால், செரிமானப் பாதையை சரிச்செய்வதன் மூலம், அது உணவுக்குழாய் அழற்சி, குடல் அழற்சி, எரிச்சல் கொண்ட குடல் நோய் மற்றும் இரைப்பை அழற்சி போன்ற நோய்களை தடுக்க உதவுகிறது.
  • வைட்டமின்கள் ஏ மற்றும் பி சத்தானது உடலின் சீத அமைப்பு மற்றும் தோலின் திசு அமைப்பின் சுகாதாரத்தைப் பராமரிப்பதிலும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள எதிர் ஆக்ஸிகரணிகள், நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துகள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது.
  • சப்போட்டாவில் கூடுதல் அளவாக கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு உள்ளது. இது எலும்புகளுக்கு வலு கொடுக்க உதவுகிறது. கால்சியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் நிறைந்திருப்பதால் எலும்புகளை அதிகரிக்கவும் வலுப்படுத்தவும் செய்கிறது.
  • சப்போட்டாவில் உள்ள சேர்மங்கள் சுவாசப்பாதை, நாசி துவாரம், கபம் சளி அகற்றுவதன் மூலம் நாள்பட்ட இருமலை போக்க செய்கிறது. 

  • சப்போட்டாவில் உள்ள மெக்னிசியம் ஆனது ரத்த நாளங்களை சீராக இயங்க வைக்கிறது. மேலும் இதிலுள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தம் மற்றும் அதன் சுழற்சியை கட்டுப்படுத்துகிறது. சப்போட்டா இரும்புச்சத்து நிறைந்தது என்பதால் இது இரத்த சோகை அபாயத்தையும் கட்டுப்படுத்தக்கூடியது.
  • கார்போஹைட்ரேட் மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் அதிக அளவு கொண்ட சப்போட்டா பழம், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இது உடல் பலவீனம், குமட்டல் மற்றும் மயக்கம் போன்ற மற்ற கர்ப்ப அறிகுறிகளைக் குறைப்பதில் உதவுகிறது.
  • ஒரு வலிமையான மயக்க மருந்துத்தன்மை இருப்பதால், சப்போட்டா பழம் நரம்புகளை அமைதியடைய செய்து, மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது. இதனால் தூக்கமின்மை, பதட்டம் மற்றும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தனிநபர்களுக்கு இப்பழம் பெரிதும் உதவும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
  • சப்போட்டாவை அதிகமாக சாப்பிட்டால் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற கூடும். இது உங்கள் சருமத்துக்கும் கூந்தலுக்கும் நன்மை செய்யகூடியது. இது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க செய்யும்.