உலக புகழ்பெற்ற விலை மலிவான சொகுசு காரான ஃபோர்ட் மாடல் டி-யை 1903-ல் வடிவமைத்தவர் அமெரிக்கரான ஹென்றி ஃபோர்ட். அதை அவர் உருவாக்கி பதினைந்து ஆண்டுகளில் நடுத்தர வர்க்க அமெரிக்கர்கள் அனைவரின் வீட்டிலும் மாடல் டி கார் கம்பீரமாக நின்றது.
ஹென்றி ஃபோர்ட் ,ஃபோர்ட் மோட்டார் கம்பனியின் அமெரிக்க நிறுவனரும், தற்காலப் பெரும்படித் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருத்துகை ஒழுங்குமுறையின் (assembly lines) தந்தை எனக் கருதப்படுபவரும் ஆவார்.
ஹென்றி ஃபோர்ட் சூலை 30, 1863 இல், மிச்சிகனில் உள்ள கிரீன்ஃபீல்ட் டவுன்ஷிப்பில் ஒரு பண்ணையில் பிறந்தார்.அவரது தந்தை ஹென்றி ஃபோர்ட் இளம் பருவத்தில் ஒரு சட்டைப்பையில் வைக்கக்கூடிய கடிகாரம் கொடுத்தார். 15 வயதில், ஃபோர்டு அதன் பாகங்களை தனித்தனியாக பிரிக்கவும் பின்பு மறுபடியும் ஒன்று சேர்ககவும் சுயமாக பழுதுபார்க்கும் முறையை கற்றுக்கொண்டார், இதன் மூலம் தனது நண்பர்கள், அண்டை வீட்டார் ஆகியோரின் கடிகாரங்களை பல முறை பழுதுபார்த்துத் தந்திருக்கிறார், இதன் மூலம் கடிகாரம் பழுதுபார்க்கும் புகழைப் பெற்றார்.
ஒரு நகரும் ட்ராக்டரை முதன்முதலில் பார்த்து வாகனங்கள் மீது ஆர்வம் கொண்டார் அவர். நீராவி இயந்திரங்களை கழட்டி சேர்ப்பது அவற்றை பழுது பார்ப்பது என்று இயங்கிக்கொண்டு இருந்த அவர் ஒரு கண்காட்சியில் பெட்ரோலில் இயங்கும் நீராவி பம்பை பார்த்தது திருப்பம். அதை ஏன் வாகனங்களில் பொருத்தக்கூடாது என்று யோசித்தார்
உதிரிப் பாகங்கள், பழைய உலோகங்களையும் கொண்டு தன் வீட்டின் பின்புறம் இருந்த ஒரு செங்கல் கூடாரத்தில் தனது வாகனத்தை வடிவமைத்தார். மணிக்கு 10 மைல், மணிக்கு 20 மைல் என்று இரண்டு வேகங்களைத் தரக்கூடிய இருவேறு வார்பட்டைகளை வடிவமைத்துப் பொருத்தினார்.
ப்ரேக் இல்லாத பின்னோக்கி செலுத்த முடியாத அந்த வாகனத்துக்கு quadricycle என்று பெயரிட்டார். அந்த வாகனத்தை ஓட்டிப்பார்க்க வேண்டும் என்று ஆர்வம் மேலிட பணிகள் முடிந்த பின்னர் அவர் முனைந்த பொழுது தான் வாசல் குறுகலாக இருக்கிறது என்று அவருக்கு புரிந்தது. சில நொடிகளில் ஆயுதத்தை எடுத்து சுவற்றை உடைத்து நொறுக்கிவிட்டு அதே வேகத்தோடு பெட்ரோல் வாகனத்தில் பயணம் போனார்.
எளியவர்களுக்கும் குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் டி மாடல் காரை. அடுத்தடுத்து பலபேர் ஒவ்வொரு பகுதியாக இணைக்கும் அதிவேக அசெம்ப்ளி லைன் முறையின் மூலம் பல லட்சம் கார்களை அதிவேகமாக உருவாக்கி சாதித்தார். அவரின் கார் சில நூறு டாலர்களில் கிடைக்க அமெரிக்காவில் கார் இல்லாத ஆளே இல்லை என்கிற சூழல் உண்டானது.
அதிக விற்பனை, அதில் தொழிலாளர்களுக்கும் அதிக சம்பளம், டீலர்களையும் மதித்து நடத்துவது என இவர் அறிமுகப்படுத்திய பல விஷயங்கள் அமெரிக்காவிற்கு முன்னோடி. தான் வாழ்ந்த க்ரீன்பீல்ட் கிராமத்தை அப்படியே அருங்காட்சியமாக மாற்றியவர்.