அமேசான் மழைக்காடு என்பது தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு. அமேசானியா அல்லது அமேசான் படுகை என்றழைக்கப்படும் இதன் பரப்பளவு ஏழு மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும். அமேசான் மழைக்காடுகளால் தான் உலகிற்கு 20 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. பூமியில் 20% ஆக்ஸிஜனை வெளியிடுகிறது பிரேசில், பொலிவியா, கொலம்பியா உள்ளிட்ட 9 நாடுகள் வரை நீண்டிருக்கும் இந்த அமேசான் காடுகளின் மொத்த பரப்பளவு 55 லட்சம் சதுர கிலோ மீட்டர்.
இதில் 6 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூரமுள்ள நதி ஓடுகிறது. உலகிலேயே நீளமான நதிகளின் பட்டியலில் அமேசான் நதி இரண்டாம் இடத்தில் உள்ளது. உலகில் உள்ள மழைக்காடுகளில் பாதி அளவுக்கு மேல் அமேசான் மழைக் காடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் வாழும் உயிரின வகைகளுள் பத்தில் ஒரு பங்கு அமேசான் மழைக்காடுகளில் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.40 ஆயிரம் தாவர இனங்கள், 3 ஆயிரம் மீன் இனங்கள், 400க்கும் மேற்பட்ட பாலூட்டிகள் இந்த மழைக்காட்டில் வசிக்கின்றன. அதேபோல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவை இனங்களும், 25 லட்சம் வகை பூச்சிகளுக்கும் அமேசான் காடுகள் தான் வாழ்விடமாக இருக்கின்றன. இங்கு, மழை பெய்தால் கூட, அந்த மழை நீர் தரையைத் தொட 10 நிமிடங்களாகும். இதன் மூலம் அமேசான் மரங்களின் அடர்த்தியை புரிந்துகொள்ள முடியும்.
அமேசானிய வண்ணத்துப்பூச்சிகள் ஆமைகளின் கண்ணீரை குடிக்கின்ற பழக்கம் கொண்டிருக்கின்றன.உலகின் மற்ற நதிகளை விட ஐந்து மடங்கு அதிகமான அளவு நீரை வெளியேற்றுகிறது அமேசான் நதி.
பெருவில் இருக்கும் இக்விடோஸ் தான் உலகிலேயே பெரிய நகரம். சாலைகளால் இந்த நகரை தொடர்பு கொள்வது இயலாத காரியம். இது அடர்ந்த அமேசான் மழைக் காட்டுக்குள் இருக்கிறது. இங்கு நான்கு லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள்.
இதனால் அமேசான் காடுகள் பூகோளத்தின் நுரையீரல் என்று அழைக்கப்படுகிறது.கடந்த 2005 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் அமேசான் காடுகளில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக பெரும்பாலான தாவரங்கள் அழிந்தன. பருவநிலை மாற்றத்தால் உலகில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்தால் அமேசான் காடுகளில் 75 சதவிகித பகுதி அழிந்துவிடும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.