ஆசிய மருத்துவத்தில் மகத்தானது மூங்கில். குறிப்பாக சீனாவிலும் ஜப்பானிலும் மூங்கில் அதிகம் காணப்படுகிறது. சீன மூங்கிலை வாழ்க்கையுடன் ஒப்பிட முடியும். முதல் 5 மாதத்தில் இந்த மூங்கில் வளரவே வளராது. ஆனால் 6ஆவது மாதத்தில் இதன் உயரம் 90 அடியாக இருக்கும்.
மூங்கில் தாவரத்தில் இருந்து பெறக்கூடிய மூங்கில் தண்டுகள் மூங்கில் குருத்து, மூங்குறுத்து என்று அழைக்கப்படுகிறது.மூங்கில் தண்டுகளை ஆசியாவில் சமையல் சுவைக்கு சேர்க்கின்றனர். இதில் அதிகமான கலோரியோ கொழுப்போ இல்லை.உண்மையில் இவை ஆரோக்கியம் மிக்கவை. அஸ்பாரகஸ் போன்று மென்மையானது. இது சீனா, தைவான், தென்கிழக்கு நாடுகளில் பருவகால சுவையான ரெசிபியாக உள்ளது.
மூங்கிலின் மருத்துவ குணங்கள்:
1.பாக்டீரியா எதிர்ப்பு பண்பு கொண்டது
2.வைரஸ் எதிர்ப்பு பண்பு கொண்டது
3.நார்ச்சத்து அதிகம் கொண்டது
4.பைட்டோ கெமிக்கல் எனப்படும் ஒருவித பண்பு கொண்டது
5.பொட்டாசியம் உள்ளதால் இதயத்துக்கு நல்லது
நன்மைகள்:
- உடல் பருமன் மற்றும் அதிக எடையின் தாக்கம் கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த மூங்கில் குருத்து உதவும். ஆய்வு ஒன்றின்படி மூங்கில் தளிர்கள் அதிக கொழுப்புள்ள உணவு உடல் பருமனை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
- நுரையீரல் ஆரோக்கியம் நம்முடைய ஆயுளுக்கு மிக முக்கியமானது. புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவருக்கு இந்த நுரையீரல் அலெர்ஜி அதிகம் உண்டாகிறது. மூங்கில் தண்டில் இருந்து எடுக்கப்படும் சாறு நுரையீரல் சம்பந்தமான ஆஸ்துமா, இருமல், பித்தப்பை பிரச்சனைக்கு நல்லது.
- சில ஆராய்ச்சியின் படி மூங்கில் தளிர்களில் காணப்படும் பைட்டோஸ்டெரால்ஸ் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் உடலில் தீங்கு விளைவிக்கும் எல்டிஎல் கொழுப்பை கரைப்பதற்கு ஏற்றதாக இருக்கும். இது தமனிகளில் இருந்து கொழுப்பை எளிதாக்க உதவுகிறது. உடல் முழுவதும் இரத்தத்தின் இயக்கம் எளிதாக உதவுகிறது.
- மூங்கில் தண்டுகள் வாய்ப்புண்ணுக்கு நல்லது.
- மூங்கில் தளிர்களில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு ஏற்றதாக இருக்கும்.
- மூங்கில் குருத்து நார்ச்சத்து கொண்டவை. இது வயிற்றுப்போக்குக்கு நல்லது. இது வயிற்று கோளாறுகளை சரி செய்யவும் உதவும். இது குடல் இயக்கங்களை ஆரோக்கியமாக மேன்மைப்படுத்த செய்யும்.
- ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை மூங்கில் இலை சாறு சரி செய்யும்.
- மூங்கிலில் நுண்ணுயிர் கொல்லி, அலெர்ஜி எதிர்ப்பு பண்பு, ஆன்டிபயாடிக் ஆகியவை உள்ளது. இது செல் வளர்ச்சிக்கு உதவுகிறது. முகத்தில் சிவந்து போதல் போன்றவைக்கு மூங்கில் மிகவும் நல்லது.
- குடலில் இருக்கும் புழுக்கள் மற்றும் வலிக்கு மூங்கில் தண்டுகள் நல்லது. மூங்கில் தண்டை சாறாக பிழிந்து குடிக்க வேண்டும். இதனால் குடலில் இருக்கும் காயங்கள் ஆற, குடலையும் சுத்தப்படுத்தும்.
- மூங்கில், உடம்பில் இருக்கும் கூடுதலான நீரை உறிஞ்ச உதவுகிறது. இதனால் குளிரும் தன்மை உடலில் கட்டுப்படுத்தப்படுகிறது.
- மூங்கில் குருத்து அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளவை. உடலில் பொட்டாசியம் அளவு நிறைவாக இருந்தால் இரத்த அழுத்தம் சீராக இருக்கும். இரத்த அழுத்தம் குறையாமல் இருப்பவர்கள் மூங்கில் குருத்து உணவில் சேர்த்து வந்தால் இது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும்.