ஆலிவ் எண்ணெய் என்ற பெயர் புதிதான விஷயம் போன்று ஒலித்தாலும், இந்த எண்ணெயை பழங்காலத்தில் இருந்தே மக்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்; பழங்கால மக்கள் ஆலிவ் எண்ணெயை ‘திரவ தங்கம்’ என்று அழைப்பர். ஆங்கிலத்தில் Olive oil என்று அழைக்கப்படும், ஆலிவ் எண்ணெயை தமிழில் இடலை எண்ணெய் என்று வழங்குவர்; இடலை எண்ணெய் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.இடலை எண்ணெயை சங்க காலத்தில் இருந்தே மக்கள் சமையலுக்கு பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.
ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் ஆலிவ் ஆயில் வகைகள் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும்.
விர்ஜின் ஆலிவ் ஆயில் – ஆலிவ் எண்ணெயின் மிக பிரபலமான, எல்லோராலும் அறியப்பட்ட ஒரு வகை விர்ஜின் ஆலிவ் ஆயில் ஆகும்; இது குறைந்த அமிலத்தன்மை கொண்டது. அதிகம் செலவழிக்காமல், ஆலிவ் எண்ணெயின் அத்தனை நன்மைகளையும் பெற இந்த வகை சிறந்தது
எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில் – குளிர் அழுத்துதல் செய்யப்பட்ட ஆலிவ் பழத்திலிருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெய் உடலுக்கு நல்லது என கருதப்படுகிறது. ஆனால், இது சற்று அதிக விலையுயர்ந்தது; எல்லோராலும் வாங்க முடியாத விதத்தில் இதன் விலை அமைந்துள்ளது.
தூய ஆலிவ் ஆயில் – இந்த எண்ணெய் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் விர்ஜின் ஆலிவ் எண்ணெய் ஆகியவை கலந்த கலவையாகும்; இதில் அதிக அமிலத்தன்மை இருப்பதால், இது பயன்படுத்த உகந்ததல்ல.
லம்பாண்டே ஆலிவ் ஆயில் – இந்த வகை எண்ணெய் எரிபொருளாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது; இது சமையலுக்கு ஏற்றதல்ல.
நன்மைகள்:
- கூந்தலுக்கு மசாஜ் செய்வதற்கு ஆலிவ் எண்ணெய் சிறந்தது. அதிலும் முடி உதிர்வு பிரச்சனையை கொண்டிருப்பவர்கள் உச்சந்தலையில் ஆலிவ் ஆயில் மசாஜ் செய்வதன் அது ரத்த ஓட்டத்தை சீராக மேம்படுத்துகிறது. இதனால் முடி உதிர்வு வேகமாக குறைவதை உணரமுடியும்.
- மென்மையாகவும், பளபளப்பான தன்மையுடன் இருக்கும் உதடுகளை பெற நாம் எல்லோருமே விருப்பம் கொண்டுள்ளோம். வெடிப்புகள் கொண்ட உலர்ந்த உதடுகள் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது என்பதோடு, உங்கள் தன்னம்பிக்கையையும் பாதிக்கும். நம்முடைய உதடுகளில் உள்ள சருமம் மிகவும் மென்மையானது, நுட்பமானது என்பதால் எளிதாக பாதிப்புக்கு உள்ளாக கூடியது. ஆனால் ஆலிவ் ஆயில் லிப் ஸ்கிரப்பை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் லிப் ஸ்கிரப்பை மிகவும் பாதுக்காப்பாக மேற்கொள்ளலாம்.
- ஆலிவ் எண்ணெயானது உச்சந்தலையில் வறண்டு இருக்கும் செதில்களை வெளியேற்றக்கூடும். இந்த செதில்கள் தான் பொடுகையும், உச்சந்தலை அரிப்பையும் உண்டாகக் கூடும். இந்த பொடுகு அதிகரிக்கும் போது இது கூந்தல் இழைகள் முழுக்க படர்வதால் மயிர்க்கால்கள் வலுவை இழக்கும் அதனால் பொடுகும் வறட்சியான செதில்களும் முடி உதிர்தலை அதிகமாக ஊக்குவிக்க கூடியவை. உங்களுக்கு பொடுகு பிரச்சனை இருந்தால் நீங்கள் ஆலிவ் ஆயில் பராமரிப்பு செய்தால் பொடுகு நீங்கும்.
- கண் மேக்கப்பை மென்மையாக அகற்றவும் ஆலிவ் ஆயில் உதவுகிறது. ஆலிவ் ஆயிலில் இரண்டு பஞ்சு துண்டுகளை நனைத்துவிட்டு அவற்றை கண்கள் மீது வைத்துக்கொள்ளவும். சில நிமிடங்களில், வாட்டர்புரூப் மஸ்காரா மற்றும் ஐலைனரை கரைக்கிறது என்பதை நீங்கள் உணரலாம். அதை அப்படியே துடைத்து எடுத்துவிடலாம். கண் மேக்கப்பை அகற்ற ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவதன் சிறப்பு என்னவெனில் இது மிகவும் பாதுகாப்பானதாகும் என்பது தான்.
- எல்லோரும் நீண்ட கூந்தலை விரும்புகிறார்கள். அதற்கு கூந்தலுக்கு எண்ணெய் பயன்படுத்துபவர்கள் திரவ தங்கமான ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவது கூந்தலின் வளர்ச்சிக்கு நன்மை தரும். ஆலிவ் எண்ணெய் அதிகப்படியான ஆரோக்கியத்தை மயிர்க்கால்களுக்கு அளிக்கிறது.
- முடி பிளவுபடுதல் என்பது அநேகம் பேர் சந்திக்க கூடிய பிரச்சனை தான். பிளவுபட்ட முனை கொண்ட கூந்தலுக்கு காரணம் முடியின் ஈரப்பதம் குறைதலும் நீடிக்கும் வறட்சியும். முடி பிளவு இருக்கும் போது அதன் முனைகளை இலேசாக கத்தரித்து பிறகு ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்தால் நுனி பிளவு குறைந்து முடி மென்மையாவதும் வெடிப்பு இல்லாமல் பளபளப்பாக இருப்பதையும் பார்க்கலாம்.