சிறுநீரக செயலிழப்பின் 10 அறிகுறிகள்

வீட்டை சுத்தம் செய்வது போன்று நம் உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி சுத்தம் செய்யும் பொறுப்பு சிறுநீரகத்துக்கு உண்டு. இவை சீராக செயல்படாத போது ரத்தத்தில் நச்சு கலந்து உடலின் ஆரோக்கியமும் கெட்டுவிடும்.

"இந்தியாவில் ஒரு மில்லியன் நபர்களில் 800 பேருக்காவது நாட்பட்ட சிறுநீரக நோய் பிரச்னையால் அவதிபடுகிறார்கள்" என்கிறது சுகாதார துறை அமைச்சகம். இதில் அதிர்ச்சி தரக்கூடிய ஒரு செய்தி என்னவென்றால், பலர் தங்களுக்கு சிறுநீரகம் பாதிப்பு அடைந்துள்ளது என்பதையே அறியாமல் இருக்கிறார்கள்; நோய் முதிர்ச்சியடையும் நிலையில்தான் தெரிந்துகொள்கிறார்கள். இது, வளரவிடக் கூடாத பிரச்னை. வளர்ந்தால் டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை என பல பெரிய சிகிச்சைகளைச் செய்யவேண்டிய அளவுக்கு முற்றிவிடும். 


அறிகுறிகள்

கால்கள், பாதங்களில் வீக்கம்

சிறுநீரகத்தி பணி தொய்வடையும் போது பாதங்கள், கைகள் வீங்க தொடங்கும். உடலில் இருக்கும் நச்சுநீர் வெளியேறாமல் சோடியத்தின் அளவில் சமநிலை உண்டாகி நீர் தேக்கம் ஆகும். இதனால் வெளியேற வேண்டிய நச்சு நீர் கணுக்கால், கைகளில் தங்கி வீக்கத்தை உண்டாக்குகிறது.கணுக்கால் வீக்கமானது தொடர்ந்து இருக்கும். அதோடு காலணிகளை அணியமுடியாத அளவுக்கு வீங்கும். இதனால் நடக்கும் போது சிரமத்தை சந்திக்கலாம். 

ஒவ்வாமை, வயிறு கோளாறு

வயிற்று வலிக்கு பல காரணங்கள் உண்டு. அதனால் வெறும் வயிறு வலியை இதனோடு ஒப்பிடவே முடியாது என்றாலும், வயிற்று வலி உடன் குமட்டல் வாந்திஉணர்வு உண்டாவது இரத்தத்தில் கழிவுகள் கலந்ததற்கான அறிகுறிகளிலும் ஒன்று. இதனால் தான் ஒவ்வாமையை உண்டாக்கும். இதனால் சரியாக சாப்பிட முடியாமல் எடை இழப்பும் உண்டாகும்.

சிறுநீர் பிரச்னை  

நுரைபோன்ற சிறுநீர் வருவது, இயல்பைவிட அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழிப்பது, சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது, சிறுநீர் தொற்று ஏற்படுவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் வருவது போன்ற உணர்வு இருந்தாலும் சிறுநீர் கழிக்க முடியாமல் போவது மற்றும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு ஏற்படுவது.  

சோர்வு / ரத்தசோகை

சிறுநீரகம் எரித்ரோபோய்டின் (Erithropoietin) எனும் ஹார்மோனைச் சுரக்கிறது. இது, ஆக்சிஜன், ரத்த சிவப்பு அணுக்களைக் கொண்டு செல்வதற்கு உதவுகிறது. சிறுநீரகம் பாதிப்படையும்போது எரித்ரோபோய்டின் ஹார்மோனின் அளவு குறையும். இதனால் ரத்த சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் அளவும் குறையும். இதனால்தான் சோர்வும் ரத்தசோகையும் ஏற்படுகின்றன.  

மூளையின் குறைந்த செயல்பாடுகள்

மூளைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு,  மறதி, கவனமின்மை, தலைசுற்றல் ஆகியவை உண்டாகும்.


வீக்கமான கண்கள்

தூக்கமில்லாமல் இருப்பதால் கண்களுக்கு ஓய்வு கிடைக்காமல்ல் கண்களை சுற்றியுள்ள பகுதியில் வீக்கம் உண்டாகும் என்று நினைப்போம். ஆனால் சிறுநீரானது புரோட்டினை வடிகட்ட முடியாமல் உடல் முழுக்க பரவிவிடுவதால் அவை கண்களை சுற்றி வீக்கத்தை உண்டாக்கும். முகம் கூட வீக்கத்தை சந்திக்கும். உடல் எடை குறைந்திருக்கும் நிலையில் முகம் மட்டும் வீங்கியிருப்பதை நன்றாகவே உணர முடியும். குறிப்பாக கண்களை சுற்றி. 

சருமத்தில் அரிப்பு

இயல்பாகவே சிறுநீரகமானது உடலில் ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்கிறது. ஆனால் சிறுநீரகங்கள் செயலிழக்கும் போது இரத்தத்தில் அதிகப்படியான நச்சுகள் தேங்கிவிடுகிறது. இதன் பாதிப்பை சருமத்தில் காண்பிக்கின்றன. அதிகப்படியான அரிப்பை சருமத்தில் உண்டாக்கி விடும். சாதாரணமாக இருக்காது அதிகப்படியான நமைச்சலை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்.

குளிர்

ரத்தசோகை காரணமாக அடிக்கடி குளிர்வது போன்ற உணர்வு தோன்றும். சிலருக்கு வெயில் சுட்டெரிக்கும் நேரத்திலும் தாங்க முடியாத அளவுக்கு குளிர் எடுக்கும்.

முதுகுவலி 

பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னை உள்ளவர்களுக்கு முதுகுவலி அடிக்கடி ஏற்படும். இன்னும் சிலருக்கு சிறுநீரகத்துக்கு அருகிலேயே வலி தோன்றும். இந்த அறிகுறி வெகு சிலருக்கு மட்டுமே  தெரியும்.

வாய்துர்நாற்றம்

உடலில் நச்சுக்களை வெளியேற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் குறை உண்டாகும் போது நச்சுகள் உடலில் தேங்கிவிடுகிறது. அப்போது உடலில் தங்கும் நச்சுக்கள் வாயில் துர்நாற்றத்தை உண்டாக்கும். பெரும்பாலும் வாய் துர்நாற்றத்தை அருகில் இருப்பவர்கள் உணர்வார்கள். ஆனால் உடலில் இருக்கும் இந்த வாடையை நீங்கள் சுவாசத்தின் போதும் சாப்பிடும் போது வெகுவாகவே உணர்வீர்கள்.