இந்தியர்கள் திருவிழாக்கள் மற்றும் விழாக்களை பெரிய அளவில் கொண்டாடுகிறார்கள்; பெரும்பாலும் ஒவ்வொரு விழா சமயத்திலும் புதிய ஆடைகள் மற்றும் தங்க நகைகள் உட்பட ஆபரணங்கள் வாங்கப்படுகின்றன. ஆடைகள் பெரும்பாலும் ஓரங்களில் தங்க நூல் எம்பிராய்டரி கொண்ட ஜரிகையுடன் (தங்க-ஜரிகை) வடிவமைக்கப்படுகின்றன.
சர்டோஸி என்பது ஒரு புகழ்பெற்ற தங்க எம்பிராய்டரி ஆகும்; இது பாரசீகத்தில் தோன்றியது, பாரசீக வார்த்தையான "சர்" என்பதற்கு தங்கம் என்றும், "டோஸி" என்பதற்கு எம்பிராய்டரி என்றும் அர்த்தமாகும் – இந்த வளமான கலைநயமானது முகலாய காலத்தில் இந்தியாவிற்குள் வந்தது. இந்த எம்பிராய்டரியானது ரிக் வேத காலத்தில் உள்ள இந்திய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இந்திய மஹாராஜாக்களின் அரச உடைகளிலும், முகலாயர்களின் கூடார சுவர்களிலும் இவை பயன்படுத்தப்பட்டன.
பிற்பகுதியில், நவாப்களுக்கு இருந்த அதிக தேவை காரணமாக, நவாப்களின் நகரான லக்னோ, இந்த வகையான எம்பிராய்டரிக்கான மையமாக மாறியது.நேர்த்தியாக ஊசி மூலம் செய்யப்படும் வேலைப்பாடானது, தங்கத்தின் ஒரு கலவையில் இருந்து தயார் செய்யப்படுகிற தங்க நூலைப் பயன்படுத்துகிறது. உலோகக் கட்டிகள் உருக்கப்பட்டு, துளையிடப்பட்ட இரும்பு கம்பிகளின் ஊடாக அழுத்தப்படுவதன் ஒரு நேர்த்தியான கம்பி உருவாகிறது, அதை சுத்தியலால் அடித்து மேலும் தட்டையாக்கலாம். இந்தக் கம்பிகளைப் பின்னர் பட்டு இழையை சுற்றி முறுக்கி, தடிமனான, சுருள் போன்ற சர்டோஸி நூலை உருவாக்கலாம். வட்டு மற்றும் மணிகள் போன்ற மற்ற தங்க அலங்காரங்களானது பெரும்பாலும் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்த இதனுடன் சேர்க்கப்படும்.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலுமுள்ள அதிக அளவிலான தேவைகளின் காரணமாக, சர்டோஸி வேலைப்பாடுகளானது ஆடைகள், கோட்டுகள், பணப்பைகள், பெல்ட்கள், ஸ்டோல்கள், காலணிகள் போன்ற பலவிதமான ஆடைகள் மற்றும் ஆபரணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த முறை உங்கள் செல்போன் அல்லது ஸ்மார்ட்போனைப் பார்க்கும்போது, இதைப் பற்றி சிந்திக்கவும்: இதில் தங்கம் உள்ளது. தங்கமானது அரிக்கும் தன்மை அல்லது துருப்பிடிக்கும் தன்மை இல்லாதிருப்பதால், அது உங்கள் செல்போனில் உள்ள ஒருங்கிணைந்த சுற்று (ஐசி) போர்டுகளில் உள்ள சிறிய இணைப்பிகளில் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில், இவற்றில் தங்கம் அதிகளவில் இல்லை - சுமார் 50 மில்லிகிராம் அளவில் - முப்பது அல்லது முப்பத்தி ஐந்து ரூபாய் மதிப்பில் உள்ளது.
உலகளாவிய ரீதியில், ஒரு வருடத்திற்கு ஒரு பில்லியன் மொபைல் ஃபோன்களை நாம் உற்பத்தி செய்கிறோம் என பல்வேறு அரசாங்க நிறுவனங்கள் மதிப்பீடு செய்துள்ளன! இது மொபைல் போன்களில் மட்டும் 3,500 கோடி ரூபாய்க்கு மேல் தங்கம் இருப்பதைக் காட்டுகிறது.
தங்கம் ஒரு சிறந்த மின்சாரம் கடத்தி என்பதால் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படுகிறது. வேறு இடங்களில் இணைப்பிகளிலும் அது பயன்படுத்தப்படுகிறது; தங்கத்தைவிட வெள்ளி மற்றும் தாமிரம் ஆகிய இரண்டு உலோகங்கள் மட்டுமே சிறந்த மின்சாரம் கடத்தியாக கருதப்படுகிறது. தங்க இணைப்பிகளானது டிஜிட்டல் தரவுகளை வேகமாகவும் துல்லியமாகவும் பரிமாறிக்கொள்ள பயன்படுத்தப்படுகின்றன.
பூமியிலிருந்து அதை தோண்டி எடுத்த பிறகு, அதை விண்வெளிக்கு செயற்கைகோள்களில் அனுப்புகிறோம். தங்கம் பூசப்பட்ட பாலியஸ்டர் படலங்களானது அகச்சிவப்பு கதிர்வீச்சுகளை பிரதிபலிப்பதற்கும், வெப்பநிலைகளை நிலைப்படுத்துவதற்கும் விண்வெளி ஓடங்களில் பயன்படுத்தப்படுகிறது. தங்கம் இல்லாமல் இருந்தால், விண்கலத்தின் இருண்ட பகுதிகள் கணிசமான வெப்பத்தை உறிஞ்சிவிடும் என்று பூமியின் விஞ்ஞான செய்தி மற்றும் தகவல்களுக்கான முன்னணி வலைத்தளமான Geology.com கூறுகிறது. அமெரிக்க விண்வெளி விண்கலமான கொலம்பியா 41 கிலோ தங்கத்தை இந்த நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தியது.
தங்கமானது கணினிகள் மற்றும் மடிக்கணினிகளின் ஐசி-களில் பயன்படுத்தப்படுகிறது. மிகவும் துல்லியமாக சொல்வதானால், கணினியின் மைய செயலாக்க அலகு (சிபீயு) அல்லது 'மூளை' என்பதை உருவாக்கும் சர்க்யூட் போர்டுகளில் பயன்படுத்தப்படுகிறது; கணினியின் பல்வேறு பகுதிகள் மின்னாற்றலைப் பெறுவதற்கும், ஒன்றை ஒன்று தொடர்ச்சியாக தொடர்புகொள்வதற்கும் இது உதவுகிறது.