தோள்பட்டை வலி மிகவும் பொதுவானது, பல காரணங்களால் வரலாம். தசைகள், தசை நார் மற்றும் தசை நாண்களில் ஏற்படும் இழுவை காரணமாக வலி ஏற்படலாம். உறைந்த தோள், பிணைந்த நரம்பு, திரிந்த தசை ஆகியவை வலி ஏற்படுத்தலாம். குறைந்த அளவில் கால்சியம் உட்கொள்வது கூட பிரச்சனைக்கு காரணமாகலாம்.
நாள்பட்ட தோள்பட்டை வலி இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் தோள்பட்டை வலி வயதானவர்கள் என்றில்லாமல் எல்லா வயதினரையும் பாதிக்கின்றது. லேப்டாப், மொபைல் போன் மற்றும் எலக்ட்ரானிக் காட்ஜெட்ஸ் பயன்படுத்துவதால், தோள்பட்டை வலி ஒரு வாழ்க்கை முறை நோயாக மாறி விட்டது.
அலுவலக வேலை செய்வதாக இருந்தாலும், வீட்டில் வேலை செய்வதாக இருந்தாலும் நமது தோள்பட்டைகளின் பங்கு அதில் முக்கியமானது. கணிப்பொறியில் வேலை செய்வதாக இருந்தாலும், சமயலறையில் எந்த பொருளை தூக்குவதாக இருந்தாலும் தோள்பட்டையின் உதவி மிகவும் அவசியமானது. தோள்பட்டையில் ஏற்படும் வலியானது நமது அன்றாட வாழ்கையையே பாதிக்கக்கூடும்.
தவறான நிலைகளில் உறங்குபவர்களுக்கு, தோள்களில் அழுத்தம் காரணமாக தோள்பட்டை வலி எளிதில் ஏற்படுகின்றது. இரவு முழுவதும் ஒரே நிலையில் உறங்குவதால் கூட இது ஏற்படலாம். உறங்கும் மெத்தையும் பிரச்சனைக்கு காரணமாகி வலியை ஏற்படுத்தலாம். திடீரென அதிக எடை கொண்ட பொருளை நீண்ட நேரம் தூக்குவதாலும் வலி ஏற்படலாம். பருவ காலங்களும் ஒரு காரணமாக இருக்கலாம், ஏனெனில் குளிர்காலத்தில் சிலருக்கு தோள்பட்டை வலி ஏற்படும்.
உடற்பயிற்சி தோள்பட்டை வலிக்கு சில வீட்டு வைத்தியங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன: தோள்பட்டை வலி உள்ளவர்கள் காலையில் உடற்பயிற்சி கண்டிப்பாக செய்ய வேண்டும். ஒரு ரப்பர் பந்தை அழுத்தி பயிற்சி செய்வது நல்ல தீர்வாகும்.
சூடான குளியல் தோள்பட்டை வலிக்கு மிகவும் இனிமையாக இருக்கும். சூடான நீரில் ஒரு துணியை முக்கி எடுத்து, அதை வலி உள்ள பகுதியில் வைக்கவும். இது வலியை குறைக்கும்.
மஞ்சள் தொடர்ந்து மஞ்சள் சாப்பிடுவது எவ்வகையான வலியையும் குணப்படுத்தும், ஏனெனில் மஞ்சள் சிறந்த அழற்சி எதிர்ப்பு திறன் கொண்டது. தோள்பட்டை வலி உள்ளவர்கள் நிவாரணத்திற்காக பாலுடன் மஞ்சள் கலந்து உண்ணலாம்.
எப்சம் உப்பு உண்பது தோள்பட்டை வலிக்கு சிறந்த தீர்வு. இதை இன்னொரு வழியிலும் உபயோகிக்கலாம். தண்ணீரில் எப்சம் உப்பு போட்டு நன்கு கொதிக்க வைத்து, அதில் ஒரு துணியை நனைத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் ஒத்தடம் கொடுத்து உடனடி நிவாரணம் பெறலாம்.
ஜாதிக்காய் பொடி சிறந்த தீர்வு ஏனெனில் அது இயற்கையில் அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டது. வலியை குறைக்க ஜாதிக்காய் பொடியை பாலில் கலந்து உண்ணலாம். சிறிது தண்ணீரில் இலவங்கப்பட்டை தூள் மற்றும் தேனுடன் கலந்தும் உண்ணலாம். உடனடி நிவாரணத்திற்கு இதனை உட்கொள்ளவேண்டும்.
கசகசா 10கிராம் அளவு கசகசாவுடன் 10 கிராம் அல்லது ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து சாப்பிட்டு வரவும். இப்படி சாப்பிடுவதால் தோள்பட்டை வலியிலிருந்து நிவாரணம் பெற முடியும். அதேபோல் இதிலிருந்து 5 கிராம் அளவு கசகசாவை எடுத்து பாலுடன் கலந்தும் பருகலாம்.
ஓமத்துடன் கடுகு எண்ணெய் சேர்த்து உட்கொள்வது வலியில் இருந்து நிவாரணம் தரும். சிறிது ஓம விதைகளை ஒரு பையில் நிரப்பி அந்த பையை சூடு செய்து தோளில் வலிக்கும் இடத்தில ஒத்தடம் கொடுப்பதும் வலியில் இருந்து நிவாரணம் தரும்.
தண்ணீரில் படிகாரம் மற்றும் சக்கரை கலந்து, வலிக்கும் இடத்தில தடவுவது வலியை குறைக்க உதவும். சிலர் வெறும் படிகாரத்தையே பொடி செய்தும் தோள்பட்டை போன்ற மூட்டுப் பகுதிகளில் உண்டாகும் வலிக்கு தேய்ப்பார்கள்.
பூண்டு ஒரு மிகச்சிறந்த அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டது என்பதால் எந்த வகையான வலி நிவாரணத்திற்கும் இது சிறந்தது. தோள்பட்டை வலி குறைய, ஆமணக்கு அல்லது கடுகு எண்ணெயில் 8-10 பூண்டு விழுதுகளை எள்ளுடன் சேர்த்து வறுத்து தினமும் இரு முறை உண்ண வேண்டும்.
எள் எண்ணெய் இயற்கையிலேயே சூடாக இருக்கும் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டது. வலிக்கும் இடத்தில அதை வைத்து மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வலி அதிகமுள்ள இடத்தில் 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை ஐஸ்கட்டியை வைப்பது வலியை குறைப்பதுடன் வீக்கத்தையும் குறைக்கும். ஆனால் மறந்தும் ஐஸ்கட்டிகளை நேரடியாக உங்கள் தோள்பட்டையின் மீது வைத்துவிட வேண்டாம் ஏனெனில் அது உங்கள் சருமத்தில் வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். ஒரு துண்டை நன்றாக மடித்து கொண்டு அதில் ஐஸ்கட்டிகளை வைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும்.
தோள்பட்டைக்கு ஓய்வு கொடுங்கள் உங்கள் தோள்பட்டைக்கு போதுமான ஓய்வு கொடுப்பது அது விரைவில் குணமடைய உதவிசெய்யும். பின்பக்கமாகவோ அல்லது வலி இல்லாத புறமோ படுக்கவும். தோள்பட்டைக்கு அடியில் மென்மையான தலையணைகளை வைத்துக்கொள்ளவும். உங்கள் தலை எப்பொழுதும் தோள்பட்டைக்கு மேலே இருக்குமாறு அமரவும், தோள்பட்டை வலி இருக்கும் சமயங்களில் பேக் மாட்டிச்செல்வதை தவிர்க்கவும். மேலே உள்ள பொருள் எதையும் கைகளை கொண்டு எடுக்க முயற்சிக்க வேண்டாம், ஏணி அல்லது நாற்காலிகளை உபயோகிக்கவும். உங்களுக்கு அடிக்கடி தேவைப்படும் பொருட்களை அருகிலேயே வைத்திருங்கள்.
அன்னாசிப்பழத்தில் உள்ள புரோமெலைன் என்னும் என்சைம் திசுக்களில் ஏற்பட்டுள்ள காயத்தையும், வீக்கத்தையும் குறைக்க உதவும். அதுமட்டுமின்றி இந்த என்சைம்கள் புதிய திசுக்கள் வளரவும், பாதிக்கப்பட்ட திசுக்களை குணப்படுத்தவும் உதவுகிறது என ஆய்வு முடிவுகள் கூறுகிறது. எனவே உங்கள் தோள்பட்டை வலியை விரைவில் குணப்படுத்த அன்னாசிப்பழத்தை சாப்பிடுங்கள், ஒருவேளை சாப்பிட சிரமமாக இருந்தால் பழச்சாறாய் குடித்துவிடுங்கள்.
அக்குபஞ்சர் பழமையான மருத்துவ முறையான அக்குபஞ்சர் தோள்பட்டையில் ஏற்படும் வீக்கம் மற்றும் தசைப்பிடிப்பை குணப்படுத்தும். அக்குபஞ்சர் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குத்தூசி முறையாகும். இதில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அடைப்புகளை சரியான ஆற்றல் மட்டத்தை தூண்டுவதன் மூலம் சரிசெய்வதாகும். விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் தசைப்பிடிப்புக்ளுக்கு அக்குபஞ்சரையே பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் இது மற்ற முறைகளை விட விரைவில் வீக்கத்தை குணப்படுத்தும்.