நீர்மூழ்கி கப்பலின் வரலாறு

 கடலில் எதிரிகளுக்கு சிம்ம சொர்ப்பனமாக இருக்கும் நீர் மூழ்கிக் கப்பலை பற்றி காண்போம்.  நீர்மூழ்கி கப்பலால்,  அறிவியல் முறைகளை பயன்படுத்தி நீருக்கு உள்ளேயே இருந்து ஏவுகணைகளை தாக்கவும் முடியும். ஒரு வேளை ,சில அறிவியல் விதிகளை தெரியாமல் பயன்படுத்தினால், அதே அறிவியலால் நமக்கு அழிவு நிச்சயம்.


புஷ்வெல் என்பவர் நீழ்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தார்.

நீர்மூழ்கிக் கப்பல் அல்லது நீர் மூழ்கிக் கலம் (submarine) என் பது நீரில் மூழ்கவல்ல, நீரில் மூழ்கியபடியே வெகுதொலைவு செல்லக் கூடிய, நீரூர்தி ஆகும். பரிசோதனைகளுக்காகப் பல நீர்மூழ்கிகள் முன்னர் உருவாக்கப்பட்டாலும், முழுமை யான நீர்மூழ்கிக் கப்பல் வடி வமைப்பு 1620ல் தொடங்கி, பலப்பல வளர்ச்சிகளை கண்டு முழு அந்தஸ்து பெற்றது முதல் உலகப் போரில் தான்.  சில மணி நேரம் மட்டும் மூழ்கக் கூடிய நிலையிலிருந்து 6 மாதங்கள் வரை நீருக்குள் இருக்கும் வரை தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது.


இரண்டாம் உலகப் போரில் நீர்மூழ்கிக் கப்பல்கள் பகைவர் கப்பல்களை மூழ்கடிக்கவே பெரிதும் உபயோகப்படுத்தப் பட்டன. இக்கப்பல்களில், நீர்மூழ்கிக் குண்டுகளும், மேல்தளத் துப்பாக்கிகளும், போர்கருவிகளாகப் பயன்படுத்த பட்டன.
அறிவியல் முன்னேற்றங்களான நீர்மூழ்கி எவுகணைகள், அணுக்கருத்திறன் பெற்ற ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கி வழிகாட்டப்பட்ட எவுகணைகள் ஆகியவை நீர்மூழ்கிக் கப்பல்கள் புதிய இராணுவத்தின் இன்றியமையா அங்கமாக ஆக்கியிருக்கின்றன. தற்போதய நீர்மூழ்கிக் கப்பல்கள் நீர்நிலைகளில் உள்ள இலக்குகளை மட்டுமல்லாது தொலைதூர நில இலக்குகளையும் தாக்கி அழிக்க வல்லவை.
தற்போது 6ம் வகுப்பில் நாம் படித்த ஆர்க்கிமிடிஸ் தத்துவத்திற்கு வருவோம். தண்ணீரில் ஒரு பொருள் தன் எடையை விட அதிக எடையுடைய நீரை வெளியேற்றினால் மட்டுமே அப்பொருள் நீரில் மிதக்கும். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான் கப்பல்கள் மிதக்கின்றன.



எடுத்துக்காட்டாக, ஒரு நாணயத்தை தண்ணீரில் தூக்கிப் போட்டால் அது உள்ளே மூழ்கி விடும். அதாவது அது எடைகேற்ப அளவான நீரை வெளியேற்ற வில்லை. அதனால் தான் மூழ்கி விடுகிறது. அதே போல் நீர்மூழ்கி கப்பல் வடிவம் எவ்வித மாற்றமுமின்றி நீரின் மேற்பரப்பில் மிதக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. நீர்மூழ்கி கப்பல் என்றால், நீரில் மூழ்க வேண்டுமல்லவா ஆக, நீர் மூழ்கி கப்பலின் எடைய கூட்டினால், அதிக எடைகொண்ட நீரை வெளியேற்றாமல் நாணயத்தை போல் நீரில் மூழ்கும்.
ஆனால் எவ்வளவு மீட்டர் அல்லது அடிவரை மூழ்க வேண்டும் என்பதை முடிவு செய்ய நாம் சரளை தொட்டிகளை (Ballast tank) ஐ பயன்படுத்துகிறோம். இந்தத் தொட்டிகள் நீர் மூழ்கி கப்பல்களை சுற்றி வடிவமைக்கப்பட்டிருக்கும். இது காற்றால் நிரப்பப்பட்டிருக்கும். சுற்றி காற்று இருப்பதால் நீரில் மிதக்கும். காற்றைவெளியேற்றினால் அந்த இடத்தில் நீரானது நிரம்பும். இப்படி நிரம்பினால் எடை அதிகரிக்கும். நீரில் மூழ்க தொடங்கும்.

மேலும் forward trim tank & Rear trim tank மூலம் ஆழத்தின் அளவை  கூட்டவும் முடியும் , குறைக்கவும் முடியும்.  ஆழக்கட்டுப்பாட்டு தொட்டிகள் (Depth Control Tanks) இதைக் கண்காணிக்க பயன்படுகிறது.
"6 மாசமா எப்படிப்பா தண்ணிக்குள்ளே இருக்க முடியும்? சுவாசிக்க ஆக்ஸிஜன் வேணாமா?" என்று கேட்டால், அறிவியலில் இதற்கும் பதில் உண்டு. இதற்கு நாம் 8ம் வகுப்பு படித்த மின்னாற் பகுப்பு (Electrolysis) பயன்படுத்தினால் போதும். இது நீரை(H20) இரண்டாக பிரிந்து ஹைட்ரஜனாகவும், ஆக்ஸிஜனாகவும் தருகிறது.


மேலும், கட்டுப்பாட்டு கருவி மூலம் தேவையில்லாத CO2 நீக்கப்படுகிறது. மேலும் கப்பலலில் உள்ள சேமிப்பு மின்கலம் மூலம் உருவாக்கப்படும் ஹைரஜன் வளி ஆக்சிஜனுடன் இணைக்கப்பட்டு நீர் உற்பத்தி செய்யப் படுகிறது. காற்று கட்டுப்பாட்டுக் கருவியின் உணர்கருவிகள் கப்பலின் பல பாகங்களில் பொருத்தப்பட்டு காற்று மாதிரிகள் சோதனை செய்யப்படுகின்றன. குடிநீர் ஆவியாக்கல் முறையிலோ, எதிர்ச் சவ்வூடு பரவல் முறையிலோ தயாரிக்கப்படுகிறது.
 நீர்மூழ்கிகப்பல்கள் பல்வேறு தகவல் தொடர்பு சாதனங்களை தன்னகத்தே கொண்டுள்ளன. அவற்றில் ஒரு அமைப்பு VLF ரேடியோ ஆகும். இவ்வமைப்பின் மூலம் நீர்மூழ்கிக் கப்பல் நீரின் மேற்பரப்பில் மிதக்கும்போதோ, குறைவான ஆழத்தில் மூழ்கியிருகையிலோ (76 மீட்டருக்கு குறைவான ஆழம்), தொடர்பு கொள்ள இயலும். பல நீர்மூழ்கிக் கப்பல்கள் மிக ஆழத்தில் இருந்தபடியே மிதக்கக்கூடிய நீண்ட மிதவை கம்பிகளை, நீரின் மேற்பரப்பை நோக்கி விடுவதன் மூலம் பகைவர் அறியாமல் தொடர்பு கொள்ளும் வசதியை பெற்றுள்ளன.
சில எடுத்துக்காட்டுகளுடன் விவாதிப்போம்.
1.ஒரு காற்று நிரப்பப்பட்ட பலூனை எடுத்துக்கொள்வோம். உங்கள் இரண்டு கையால் அதை அழுத்தும் போது கன அளவு குறையும்.  மேலும் அழுத்தத்திற்கு உட்படுத்தினால் அது வெடிக்கும். ஆக அழுத்தம் அதிகரித்தால் கன அளவு குறையும். இது நீர் மூழ்கி கப்பலுக்கும் பொருந்தும். நீருக்குள் செல்ல செல்ல அழுத்தம் அதிகரிக்கும். 



ஆகவே , ஒவ்வொரு நீர் மூழ்கி கப்பலுக்கும் Crash level point இருக்கும். அதற்கு மேல் அது பலூனை போல் சிதறி விடும்.
உதாரணமாக , Crash Level சுமார் 400 மீட்டர்  ஆழம்வரை தான் உள்ளே செல்ல முடியும் என்று வைத்துக்கொள்வோம். ஒரு வேளை அதற்கு மேல் 500, 600 மீட்டர் சென்று விட்டால் சுமார் தோராயமாக 20000 டன் அழுத்தத்தை கொடுக்கும். அதாவது ஒரு முட்டை மீது ஒரு லாரி ஏறி நிற்பது போல் என்று நினைத்து பாருங்கள்.


கப்பலின் பயன்படுத்தக் கூடிய வெளிப்புற உலோகத்தை பொறுத்தே இது கணக்கிடப்படுகிறது .எஃகு வை பயன்படுத்தினால் 4 Mpa வரையிலும்,Titanium பயன்பத்தினால் 10 mpa வரை தாங்க கூடும். ஆக, நீர்மூழ்கி கப்பலை பயன்படுத்துவதற்கு இது எவ்வளவு ஆழம் வரை செல்ல முடியும் என்பதை இது போன்ற அறிவியல் விதிகளை கணக்கில் எடுத்துக் கொண்டு தான் முடிவு செய்யப்படுகிறது