
டெல்லி: தந்தை, மகன் மரண வழக்கில் சிபிஐ விசாரணையை விட சிறப்பு புலனாய்வு குழு விசாரணையே உகந்தது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். சிபிஐ விசாரணையை வரவேற்கிறேன் என்றும் வழக்கில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது என்றும் அவர் டிவிட்டர் பக்கததில் பதிவு செய்துள்ளார். 1996-ம் ஆண்டில் டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வகித்த விதிகளை போலீசார் பின்பற்றுவதில்லை என்று ப.சிதம்பரம் டிவிட் செய்துள்ளார்.
from Dinakaran.com |29 Jun 2020 https://ift.tt/2VmEQjd