
ஹைதராபாத்: தெலங்கானா மாநில உள்துறை அமைச்சர் முகமது அலிக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முகமது அலிக்கு ஆஸ்துமா உள்ளதால் கடந்த மூன்று தினங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனை தொடந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
from Dinakaran.com |29 Jun 2020 https://ift.tt/387wilt