வெயிலில் நீண்ட நேரம் இருப்பதால் முகம் கருத்து போவது பொதுவாகும். வெயிலின் அதிக வெப்பம் மற்றும் வியர்வையால், சருமத்தில் கறுப்பு விளிம்புகள் மற்றும் நிற மாற்றங்கள் ஏற்படலாம். கோடைக்காலங்களில் வெயிலின் காரணமாக சருமம் கருகி கறுப்பாக மாறுவதற்கு சன் டேன் என்று அழைக்கப்படுகிறது. இதை சரி செய்ய, எளிய மற்றும் இயற்கை வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தி சருமத்தை மீட்டெடுக்க முடியும். இதனால், உங்கள் சருமம் மீண்டும் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
உருளைக்கிழங்கு உங்கள் சருமத்தை புதுப்பித்து, பிரகாசமாக்க உதவுகிறது. இது வயதான அடையாளங்களை குறைத்து, தோல் மேல் உள்ள அழுக்குகளை நீக்க உதவுகிறது. முதலில் உருளைக்கிழங்கை நன்கு அரைத்து சாறு எடுக்கவும். பிறகு, அந்த சாற்றில் ஒரு ஸ்பூன் முல்தானி மிட்டியைச் சேர்த்து, நன்கு கலந்த ஒரு பேஸ்டு உருவாக்கவும். இந்த பேஸ்டை முகத்தில் அப்ளை செய்து 15-20 நிமிடங்கள் காத்திருங்கள். பிறகு, முகத்தை நீரில் கழுவுங்கள்.
தக்காளி ஆன்டி ஆக்சிடண்ட் நிறைந்தது. தக்காளியை கூழாக மசித்து, சர்க்கரை சேர்த்து முகத்துக்கு ஸ்க்ரப் செய்யலாம். இது சருமத்தின் கருமையை நீக்கும் மற்றும் வெயிலின் விளைவுகளை குறைக்கும்.
வெள்ளரிக்காய், நீர் நிறைந்த மற்றும் வைட்டமின்கள் மிகுந்த பொருளாகும். இது, சருமத்தின் ஈரப்பதத்தை பேணுவதில் உதவுகிறது. வெள்ளரிக்காயை நறுக்கி அரைத்து, முகம், கை மற்றும் கால் பகுதிகளில் பரப்புவது வெயிலின் உஷ்ணம் மற்றும் சிவப்புகளை குறைக்க உதவுகிறது. வாரத்துக்கு மூன்று முறை இதனை செய்யும் போது, சருமம் சோர்வில்லாமல் மிருதுவாக இருக்கும்.
எலும்பிச்சை சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம், இயற்கை பிளீச்சிங் சக்தியைக் கொண்டது, மேலும் தேன் உங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்கிறது.2 ஸ்பூன் எலும்பிச்சை சாற்றுடன் 2 ஸ்பூன் தேனைச் சேர்க்கவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் வைக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் நன்றாக கழுவுங்கள்.
ஆரஞ்சு சாறு வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாக செயல்படுகிறது. இதனை கெட்டித் தயிருடன் கலந்து, முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவுவதன் மூலம், சருமத்தின் வறட்சியை குறைத்து மற்றும் ஈரப்பதத்தை மேம்படுத்த முடியும். இதுவும் உங்கள் சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் மாற்ற உதவுகிறது.
உருளைக்கிழங்கு சாறு மற்றும் பாலை கலந்து உபயோகித்தால், உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும், நிறம் மேம்படுத்தப்படவும் உதவுகிறது. 2 டீஸ்பூன் பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துப், அதில் 1 டீஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு மற்றும் சிறிது கற்றாழை ஜெல்லையும் சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி, 10-15 நிமிடங்கள் வைக்கவும். அதன் பிறகு, முகத்தை நன்றாக கழுவுங்கள்.
அதிக அளவிலான தண்ணீர் தினசரி குடியுங்கள். சருமத்தை சீரமைக்க உதவக்கூடிய விட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்களை கொண்ட உணவுகளைச் சேர்க்கவும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் சருமக் கருமையை குறைத்து, உங்கள் சருமத்தை மீண்டும் பிரகாசமாக மாற்ற முடியும்..
By salma.J