காராமணி உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புத பயறு!!!

காராமணி அல்லது தட்டைப்பயறு (Vigna unguiculata), இந்தியாவின் விவசாயத்தில் முக்கியமான பயறு வகையாகக் கருதப்படுகிறது. இது கருமை மற்றும் செந்நிறத்தில் காணப்படுகிறது. உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்களை வழங்குவதோடு, மருத்துவ குணங்களாலும் சிக்கல்களை எதிர்கொள்வதில் உதவுகிறது. இதனால் இவை சமையலிலும், சுகாதாரமும் முக்கியமாகக் கருதப்படுகிறது.


காராமணியின் வரலாறு 

காராமணி, பண்டைய காலங்களில் இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் பயிரிடப்பட்டது. இது நீர்ப்பாசனம் மூலம் வளரும் தன்மையைக் கொண்டது, இதனால் நிலத்தைப் பாதுகாக்கும் பொருட்டு பயிரிடப்படுவதால், அதிக அளவில் உற்பத்தி செய்ய முடிகிறது. ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய காராமணி, சமையலுக்கான ஒரு முக்கிய உணவு வகையாக விளங்குகிறது, இதனால் உணவுகளில் பல்வேறு வகையில் பயன்படுத்தப்படுகிறது.


பயன்பாடுகள்

காராமணிப் பயற்றை நீர்,உப்பு சேர்த்து வெந்தவுடன் அது ருசிகரமான சிற்றுண்டியாக மாறுகிறது. இது முழு உணவிற்கு உகந்ததாகவும், புரதங்கள் நிறைந்ததாகவும் உள்ளது. மேலும் காராமணியை குழம்பு, பொரியல் மற்றும் அவியல் போன்ற உணவுகளில் சேர்ப்பதால் அதன் சுவை அதிகரிக்கிறது. இதன் நறுமணமும் ருசியும், உணவுக்கு தனிச் சிறப்பை கொடுக்கின்றது. பலவகையான மசாலா உணவுகளில் சேர்க்கும்போது, காராமணியின் தனித்துவமான மணமும் சுவையும், உணவிற்கு மகிழ்ச்சியை தருகிறது, இதனால் இது உணவின் கவர்ச்சி மற்றும் சுவையை மேலும் உயர்த்துகிறது.


மருத்துவ பயன்கள்

காராமணி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல்வேறு மருத்துவ பயன்கள் கொண்டது இதன் முதன்மை தன்மைகள்


1. செரிமானம்

காராமணி, செரிமானத்தை மேம்படுத்தி, வயிற்றுப்போக்கை குறைக்கும் பண்புகள் கொண்டது. இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் உதவுகிறது.

2. சர்க்கரை நோய்

சர்க்கரை நோயாளிகளுக்கு காராமணி ஒரு சிறந்த தேர்வு. இதன் குறைந்த கொழுப்பு மற்றும் உயர் நார்ச்சத்து, இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்குவதில் உதவுகிறது.

3. இதய ஆரோக்கியம்

காராமணி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மையைக் கொண்டது. இதன் நார்ச்சத்து LDL (Low-Density Lipoprotein) கொழுப்புகளை குறைக்கும் மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.


காராமணி வாயு கொண்ட பயிராக இருப்பதால், இதனை சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடும் போது, வாயு பிரச்னைகளை தவிர்க்க உதவுகிறது. இந்த காராமணியின் சேர்க்கை செரிமானத்தை மேம்படுத்துவதோடு உணவின் சுவையைவும் அதிகரிக்கும். எனவே காராமணியை சாப்பிடும்போது இதனை சேர்த்து செய்தால் ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவை அனுபவிக்க முடியும்.


காராமணி, அதன் சத்துக்கள் மற்றும் மருத்துவ நன்மைகளால் உணவிற்கு முக்கியமானதாக மட்டுமல்ல, இதய ஆரோக்கியத்திற்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் பாதுகாப்பானது. உங்கள் உணவில் காராமணியைச் சேர்த்து அதன் பலன்களை அனுபவிக்கவும்..

By salma.J