எப்போதும் வித்தியாசமான திரைக்கதையோடு பல சுவாரசங்கள் நிறைந்த கதாபாத்திரங்களுடன் காமெடி கலந்து படம் எடுப்பதில் புகழ்பெற்றவர் சிம்புதேவன், தற்போது யோகிபாபு மற்றும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் இயக்கியுள்ள போட் திரைப்படத்தின் திரைவிமர்சனம் பற்றி பார்ப்போம்.
![]() |
tamil hikoo |
கதைக்களம்:
1943ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தில் இந்த படத்தின் கதை தொடங்குகிறது.சென்னை நகரத்தின் மீது ஜப்பான் போர் விமானங்கள் குண்டு வீசப் போவதாக வந்த செய்தி, சென்னை மாகாண மக்களையும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களையும், காவல்துறையையும் கதிகலங்க செய்கிறது.உடனே யோகி பாபு தன் பாட்டியுடன் போட்-ல் ஏறி கடலுக்குள் சென்று தப்பிக்க நினைக்கிறார்.அவர்களுடன் ஏழு பேர் பயணம் செய்கிறார்கள் அப்பயணத்தின் போது அணுகுண்டை விட மனிதனின் சுயநலம் எவ்வளவு கொடுரமானது என்பதை பற்றி விவரிப்பது தான் போட் திரைப்படத்தின் கதை.
படத்தின் பிளஸ் :
யோகிபாபு காமெடி கதாபாத்திரங்களுக்கு குட் பாய் சொல்லிவிட்டு கதையின் நாயகனாகவே நடிக்கலாம் போல, அந்தளவிற்கு எமோஷ்னலாகவும் ஸ்கோர் செய்கிறார்.அவரை தொடர்ந்து நூலகராக நடித்துள்ள எம்.எஸ். பாஸ்கர் மற்றும் ஹீரோயினாக கெளரி ஜெ கிஷன் அந்த கர்நாடக சங்கீதம் பாடலில் ஸ்கோர் செய்து விடுகிறார்கள்.படத்தில் ஆங்காங்கே வரும் சர்க்காசம் மற்றும் அரசியல் சார்ந்த வசனங்களில் டைரக்டராக சிம்புதேவன் தன்னை நிரூபிகிறார்.
மைனஸ்:
பரபரப்பான கதை என்றாலும் அதை திரைக்கதையில் கொண்டு வருவதில் கொஞ்சம் சறுக்கலை சந்தித்துள்ளது. படம் முழுவதும் ஒரு போட் என்பதால் யார் போட்-லிருந்து இறங்குவார்கள், யார் காப்பாற்றப்படவேண்டும் என்ற பதட்டமே இல்லாமல் படம் நகர்கிறது. அதோடு பூர்வீக மக்களின் நிலை இன்றும் மாறவில்லை என்ற அழுத்தமான கருத்துகளிலும் , காட்சிகளிலும் எந்த அழுத்தமும் இல்லை.திரைக்கதை அவ்வளவு பரபரப்பை எங்கையும் ஏற்படுத்தவில்லை முதல் பாதி சுவாரஸ்யமாக இருந்தாலும், இரண்டாம் பாதி டல் அடித்து விடுகிறது.
"மொத்தத்தில் போட்-ல் இருந்தவர்களின் பரிதவிப்பு ஆடியன்ஸிடம் போய் சேர்வதில் சற்று சறுக்கியதால் இந்த போட் தத்தளித்துக்கொண்டே உள்ளது"