vivo T2 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

vivo T2 5G ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே, கேமரா, பிராசசர் மற்றும் பேட்டரி பற்றி பின்வருமாறு விரிவாகக் காண்போம்.

டிஸ்ப்ளே

vivo T2 5G ஸ்மார்போனானது 6.38-இன்ச் AMOLED HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.மேலும் இது 90 Hz refresh rate ஐயும் 360Hz touch sampling rate ஐயும் கொண்டுள்ளது.
கேமரா
vivo T2 5G ஸ்மார்போன் 64MP OIS Anti Shake முதன்மை கேமராவையும் 2MP Bokeh கேமராவையும் பின்புறத்தில் கொண்டுள்ளது. மேலும் இது முன்புறத்தில் 16MP கேமராவை selfie கேமராவாகவும் கொண்டுள்ளது.
பிராசசர்
vivo T2 5G ஸ்மார்ட்போன் 6nm கொண்ட Snapdragon 695 பிராசசரைக் கொண்டுள்ளது. மேலும் இது Funtouch OS 13 OS வசதியையும் கொண்டுள்ளது. 
பேட்டரி மற்றும் ஸ்டோரேஜ்
vivo T2 5G ஸ்மார்ட்போன் ஆனது 4500mAh பேட்டரி வசதியையும் 44W பிளாஸ் சார்ஜ் வசதியையும் கொண்டுள்ளது. vivo T2 5G ஸ்மார்ட்போன் 6GB மற்றும் 8GB என இரண்டு RAM வசதியிலும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியிலும் கிடைக்கிறது.
முதன்மை நிறங்கள் மற்றும் விலை 
vivo T2 5G ஸ்மார்ட்போனானது Nitro Blaze, Velocity Wave போன்ற 2 முதன்மை நிறங்களில் கிடைக்கிறது. vivo T2 5G ஸ்மார்ட்போன் 6GB RAM+ 128GB ஸ்டோரேஜ் போன் 18,999 விலையிலும் 8GB RAM+ 128GB ஸ்டோரேஜ் போன் 20,999 விலையிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.