Kawasaki நிறுவனம் Kawasakhi Versys X-300 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் ரூ.4,80,000 - 5,20,000 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த Kawasakhi Versys X-300 பைக் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முதல் ஐந்து விஷயங்கள் இங்கே உள்ளன.
புதிய Kawasaki Versys X-300 பைக் 2170 mm நீளத்தையும் 861mm அகலத்தையும் 1390mm உயரத்தையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக் 815mm சீட் உயரத்தையும் 174kg கிரப் எடையையும் கொண்டுள்ளது. புதிய Kawasaki Versys X-300 பைக் 17L ஃபியூல் டேங் கெப்பாசிட்டியைக் கொண்டுள்ளது
எஞ்சின்
Kawasaki Versys X-300 ஆனது 296 CC, 4-ஸ்ட்ரோக், 2-சிலிண்டர், DOHC, லிக்விட் கூல்டு எஞ்சின் மூலம் இயங்குகிறது. இந்த பைக்கின் எஞ்சின் 38.7 bhp பவரையும், 25.7 nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. மேலும் இந்த பைக்கின் எஞ்சின் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
நிறம் மற்றும் விலை
Kawasakhi Versys X-300 பைக் Lime Green நிறத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த Kawasakhi Versys X-300 பைக் 4,80,000 லட்சத்திலிருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.