Benelli TNT 600 i பைக்கின் சிறப்பம்சங்கள்

Benelli  நிறுவனம் Benelli TNT 600 i மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் ரூ.6,30,000-6,50,000 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த Benelli TNT 600 i பைக் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முதல் ஐந்து விஷயங்கள் இங்கே உள்ளன.

டிசைன்

Benelli TNT 600i புதிய உடல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. Benelli TNT 600i இன் முன்புறம் ஸ்மோக்டு லென்ஸில் இரட்டை ஹெட்லேம்ப் வடிவமைப்பை கொண்டுள்ளது. இது ஹெட்லேம்ப் லென்ஸின் மேல் LED DRLகள் போன்றவற்றை கொண்டுள்ளது, மேலும் Benelli லோகோவுடன் பாடி நிறத்தில் சிறிய பிகினி ஃபேரிங் மற்றும் மேலே ஒரு சிறிய ஃப்ளை ஸ்கிரீன் ஆகியவை உள்ளது. ஃபியூல் டேங்க் அழகாக செதுக்கப்பட்டுள்ளது மற்றும் முன் USD ஃபோர்க்குகளுக்கு அருகில் நீட்டிக்கப்பட்டுள்ள ரேடியேட்டர் கவசங்கள் LED டர்ன் இன்டிகேட்டர்களை மிக நேர்த்தியாகக் கொண்டுள்ளன. 

Benelli TNT 600i  ஆனது, ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் பொதுவான பிளவு இருக்கை வடிவமைப்பை கொண்டுள்ளன. மற்ற மாற்றங்களில் புதிய ரியர் ஸ்விங்கார்ம், சேஸ்ஸில் மாற்றங்கள், புதிய அலாய் வீல்கள், சிறந்த டிஸ்க் பிரேக்குகள், புதிய டயர்கள் போன்றவை அடங்கும்.

Benelli TNT 600i பைக்கின் முழு டிஜிட்டல் யூனிட் வண்ணமயமாக அழகாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.

டைமென்சன் 

புதிய Benelli TNT 600 i பைக் 2160 mm நீளத்தையும் 800mm அகலத்தையும் 1180mm உயரத்தையும் கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக் 800mm சீட் உயரத்தையும் 1480mm வீல் பேஷையும் 231kg கிரப் எடையையும் கொண்டுள்ளது. புதிய Benelli TNT 600 i பைக் 15L ஃபியூல் டேங் கெப்பாசிட்டியைக் கொண்டுள்ளது

எஞ்சின்

Benelli TNT600i பைக் 600CC இன்-லைன் நான்கு சிலிண்டர் மோட்டாரை கொண்டுள்ளது. இது 11,000rpm இல் 81.5PS பவரையும் 8000rpm இல் 55Nm டார்க் திறனையும் வழங்குகிறது. ஒப்பிடுகையில், இந்தியா-ஸ்பெக் TNT 600i பைக் 11,500rpm இல் 85.07PS பவரையும் 10,500rpm இல் 54.6Nm டார்க் திறனையும் வழங்குகிறது.

மைலேஜ்

Benelli TNT600i பைக் 18 kmpl மைலேஜைக் கொடுக்கிறது. ARAI இன் படி, TNT600i BS4 பைக் சராசரியாக 19 kmpl மைலேஜைக் கொடுக்கிறது. இது 2% பைக்குகளை விட சிறந்த மைலேஜை வழங்குகிறது. 15 லிட்டர் ஃபியூல் டேங்க் கொண்ட இந்த பைக் முழு டேங்கில் 285 கிமீ வரை செல்ல முடியும்.

நிறம் மற்றும் விலை

 Benelli TNT600i பைக் Silver,Red,White போன்ற நிறத்தில்  கிடைக்கிறது. மேலும் இந்த Benelli TNT600i பைக் 6,30,000 லட்சத்திலிருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.