BMW iX எலக்ட்ரிக் காரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

BMW நிறுவனம் கார்களின் வியாபாரத்தில் பெரிய இடத்தை பெற்றுள்ளது. இந்த நிறுவனம் முதல் முறையாக எலக்ட்ரிக் காரை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டுள்ளது. அந்த வகையில் BMW நிறுவனம் உருவாக்கிய முதல் எலக்ட்ரிக் கார் BMW iX. இந்த புதிய BMW iX எலக்ட்ரிக் காரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் பின்வருமாறு:

டிசைன்

புதிய BMW iX மாடல் டூயல் பீம் LED ஹெட்லேம்புகள், இண்டிகிரேட்டர் LED டே டைம் ரன்னிங் லைட்டுகள், பெரிய லிவர் கிரில், ஸ்கல்ப்டேட் பம்பர், 3D போனேட் ஆகியவற்றை கொண்டுள்ளது. சைடு பார்ட்டில் பெரிய அலாய் வீல்கள், ஃபிளேர்டு ஷோல்டர், செவ்வக வீல் ஆர்ச்சுகள், ஃபிரேம்லெஸ் விண்டோ, பின்புறத்தில் மெல்லிய LED டெயில் லைட்டுகள் ஆகியவையும் டிசைனில் இடம்பெற்றுள்ளன. 

உட்புறத்தில், வளைந்த 9 இன்ச் கிளாஸ் இன்போடெயின்மெண்ட் டிஸ்ப்ளே, 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளாஸ்டர், ஹெக்சகோனல் டிசைன் கொண்ட ஸ்டீயரிங் வீல், பானரோமிக் சன்ரூஃப், மல்டி ஃபன்ஷன் சீட்கள், ஆம்பியண்ட் லைட்டிங், 18 ஸ்பீக்கர்கள் உடைய ஹார்மன் கார்டன் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் போன்ற பல அம்சங்களைக் கொண்டுள்ளது.

டைமென்சன்

BMW iX எலக்ட்ரிக் கார் 4953mm நீளத்திலும் 2230mm அகலத்திலும் 1695mm உயரத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் கார் 5 நபர் உட்காரும் வகையில் சீட்டிங் கெப்பாசிட்டியை கொண்டுள்ளது. மேலும்  இது 500l பூட் ஸ்பேஸைக் கொண்டுள்ளது.

பேட்டரி

 BMW iX காரின் ஆக்ஸில்களில் டூயல் எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை இரண்டு லித்தியம் அயன் பேட்டரிகள் மூலம் இயங்குகின்றன. இந்த மின் மோட்டார்கள் 326bhp பவரையும் 630nm டார்க் திறனையும் வழங்குகின்றன. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 6.1 வினாடிகளில் அடைந்து விடும்.இந்த கார் டாப் ஸ்பீடு ரேஞ்சாக 372 இலிருந்து 425km வரை வழங்குகிறது. இந்த காரின் டாப் ஸ்பீடு 200kmph ஆகும்.

சார்ஜ்

புதிய BMW iX எலக்ட்ரிக் கார் 150kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. இதன் மூலம் 31 நிமிடங்களில் காரை 80% சார்ஜ் செய்யலாம். இது தவிர 50kW DC சார்ஜ் ஆப்ஷனும் கூடுதலாக வழங்கப்படுகிறது. மேலும் AC சார்ஜ் மூலம் இந்த எலக்ட்ரிக் காரை 7 மணி நேரம் முழுமையாக சார்ஜ் செய்யலாம். இந்த புதிய BMW iX கார் முழு சார்ஜ் செய்தால் 426கிமீ வரை செல்லும்.

நிறம் மற்றும் விலை

புதிய BMW iX எலக்ட்ரிக் கார் மினரல் ஒயிட், பைட்டோனிக் ப்ளூ, சோஃபிஸ்டோ கிரே ப்ரில்லியண்ட் எஃபெக்ட், அவென்டுரைன் ரெட் மெட்டாலிக் மற்றும் பிளாக் சஃபைர் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இந்த BMW iX எலக்ட்ரிக் கார் 1.21 லட்சத்திலிருந்து கிடைக்கிறது.