இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு 16 நாடுகள் விசா இல்லாத பயணத்தை (Visa Free Travel) அனுமதிக்கின்றன என்று இந்திய அரசு மாநிலங்களவையில் அறிவித்தது. மேலும், 43 நாடுகள், வந்தபின் விசா பெறும் வசதியை வழங்கியுள்ளன. அதோடு, 36 நாடுகள் e-visa வசதியை இந்தியர்களுக்கு வழங்குகின்றன
இந்தியர்களுக்கு விசா இல்லாத பயணத்தை வழங்கும் நாடுகள் இவை:
பூட்டான்
டொமினிகா
பார்படாஸ்
கிரெனடா
ஹைட்டி
ஹாங்காங் எஸ்.ஏ.ஆர்
மாலத்தீவுகள்
மொரீஷியஸ்
மொன்செராட்
நேபாளம்
நியு தீவு
செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்
சமோவா
செனகல்
செர்பியா
டிரினிடாட் மற்றும் டொபாகோ
மலேசியா, இலங்கை மற்றும் நியூசிலாந்து ஆகியவை இந்தியர்களுக்கு இ-விசா வழங்கிய நாடுகளில் அடங்கும்.
ஒரு குறிப்பிட்ட நாட்டின் பாஸ்போர்ட் இருக்கும் ஒருவரால், பல நாடுகளுக்கு எளிதாக சென்று வர முடிகிறது என்றால், அது அந்த நாட்டு பாஸ்போர்டின் சக்தியையும் குறிக்கிறது. பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒருவருக்கு விசா இல்லாத பயணங்கள் அதிகம் கிடைப்பது, அந்த பாஸ்போர்டிற்கு இருக்கும் அதிக சக்தியை எடுத்துக்காட்டுகிறது.