தமிழ்நாடு அரசு கல்லூரி மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், 2026 ஆம் ஆண்டிலும் இலவசமாக லேப்டாப் வழங்கும் திட்டத்தை தொடர உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர்தர லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளன.
🎓 யார் யாருக்கு இலவச லேப்டாப்?
தமிழ்நாடு அரசின் “உலகம் உங்கள் கையில்” இலவச மடிக்கணினி திட்டம் 2026 மூலமாக, மொத்தம் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக உயர்தர லேப்டாப் வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டம் ஒரே நாளில் முடிவடையாமல், பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
🟢 முதல் கட்டம் – 10 லட்சம் மாணவர்கள்
📅 தொடக்கம்: 05.01.2026
முதல் கட்டமாக,
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அதிகாரபூர்வமாக 05.01.2026 அன்று தொடங்கி வைத்தார்.
இந்த 10 லட்சம் மாணவர்களில் அடங்குபவர்கள்:
- அரசு கலை & அறிவியல் கல்லூரிகள்
- அரசு பொறியியல் கல்லூரிகள்
- அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள்
- ITI, மருத்துவம், விவசாயம், சட்டக் கல்லூரிகள்
- அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள்
இவ்வாறு பல துறைகளில் பயிலும் மாணவர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.
🟡 இரண்டாம் கட்டம் – மீதமுள்ள 10 லட்சம் மாணவர்கள்
முதல் கட்டம் முடிந்த பின்பு,
மீதமுள்ள 10 லட்சம் தகுதி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு அடுத்த கட்டமாக லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் உள்ள மொத்தம் 20 லட்சம் மாணவர்கள் இந்த இலவச மடிக்கணினி திட்டத்தில் பயனடைவர்.
💻 லேப்டாப்பின் முக்கிய அம்சங்கள்
இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் லேப்டாப், மாணவர்களின் கல்வி மற்றும் ஆன்லைன் கற்றலுக்கு முழுமையாக ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டெக்னிக்கல் ரீதியாக சிறப்பம்சங்கள்
- ப்ரோசிஸோர்: Intel Core i3 / AMD Ryzen 3
- RAM: 8 GB
- ஸ்டோரேஜ்: 256 GB SSD
- டிஸ்பிளே: 15.6 inch Full HD
- OS: Windows 11 Home, BOSS Linux (Dual Boot)
- பிராண்ட்: Dell, HP, Acer
கூடுதல் சலுகைகள்
மாணவர்களுக்கு லேப்டாப் மட்டுமல்லாமல் கூடுதலாக பின்வருபவையும் வழங்கப்படுகின்றன:
- MS Office 365 – 1 வருடம் இலவசம் சப்ஸ்கிரிப்சன்
- Perplexity Pro AI – 6 மாதம் இலவசம் சப்ஸ்கிரிப்சன்
- High Quality Laptop Bag
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்
இந்த இலவச மடிக்கணினி திட்டத்தின் முக்கிய இலக்கு:
- டிஜிட்டல் கல்வியை ஊக்குவித்தல்
- ஆன்லைன் கற்றலை எளிதாக்குதல்
- ஏழை மற்றும் நடுத்தர குடும்ப மாணவர்களுக்கு தொழில்நுட்ப ஆதரவு
- வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்துதல்
👉 நீங்கள் அரசு அல்லது அரசு உதவி பெறும் கல்லூரி மாணவரா?
இந்த திட்டத்தின் கீழ் இலவச லேப்டாப் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்! 🎉