எலும்பை வலுவாக்கும் உணவுகள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகள்


எலும்புகள் நமது உடலின் அடிப்படையான கட்டமைப்பாக செயல்படுகின்றன. அவை நமக்கு அடிப்படையான ஆதரவை வழங்கி, உடலின் இயக்கத்தை எளிதாக்க உதவுகின்றன. எனவே, எலும்புகளின் ஆரோக்கியத்தை காக்க, அவற்றை வலுவானதாக வைத்திருக்க தேவையான உணவுகளைத் தேர்வு செய்யுவது மிகவும் முக்கியம்.


1. ஆட்டுக்கால் எலும்பு மற்றும் மஜ்ஜை
ஆட்டுக்கால் எலும்பு மற்றும் மஜ்ஜையில் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து அதிகமாகக் காணப்படுவதால், இது எலும்புகளை வலுவாக்க உதவும். ஆட்டுக்கால் சூப் மிகவும் நன்மைத்தர கூடிய உணவாக இருக்கிறது.

2. நண்டு
நண்டில் கால்சியம் அதிகமாகக் காணப்படுகிறது, இதன் மூலம் எலும்புகள் வலுவாகி, நலமாக இருக்கும்.

3. பால் மற்றும் பால் சார்ந்த வகைகள் 
பால், தயிர், பன்னீர், சீஸ் ஆகியவை கால்சியம் நிறைந்த உணவுகள்,இவை எலும்புகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன.

4. கீரை வகைகள்
முருங்கைக் கீரை, அகத்திக்கீரை, வெந்தயக்கீரை போன்ற கீரைகள் கால்சியம் மற்றும் பல ஊட்டச்சத்துக்களை கொண்டவை.

5. மீன்
சால்மன் மற்றும் சார்டின் போன்ற மீன்களில் வைட்டமின் D மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன, இது எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.

6. முட்டை
முட்டையின் மஞ்சள் பகுதி வைட்டமின் D-ஐ வழங்குகிறது, இது எலும்புகளுக்குப் போதுமான நன்மைகளை அளிக்கிறது.

7. பழங்கள்
திராட்சை, மாதுளை, அத்திப்பழம் போன்ற பழங்களில் எலும்புகளை வலுவாக்க உதவும் முக்கிய ஊட்டச்சத்துகள் உள்ளன.


8. கீரை மற்றும் காய்கறிகள்
பீட்ருட், புரோக்கோலி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் வைட்டமின் K மற்றும் கால்சியம் வழங்குகின்றன, இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

9. பிரண்டை
பிரண்டைத் தண்டு மற்றும் பிரண்டைத் துவையல் போன்றவை எலும்புகளை வலுவாக்க முக்கியமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன.

10. கம்பு மற்றும் கேழ்வரகு
கேழ்வரகு மாவில் களி, தோசை போன்ற உணவுகள் கால்சியம் மற்றும் புரதத்தை வழங்குகின்றன.

இந்த உணவுகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்து, எலும்புகளின் வலுவை பாதுகாத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்..

By salma.J