River Indie EV ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்

River Indie EV எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெங்களூரை தளமாகக் கொண்ட EV நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். அத்தகைய River Indie எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டிசைன், ரேஞ்சு, மைலேஜ் மற்றும் விலை பற்றி பின்வருமாறு காண்போம்.

டிசைன் மற்றும் அம்சங்கள்

River Indie EV ஸ்கூட்டர் ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.River Indie EV ஸ்கூட்டரில் லோவாக பொருத்தப்பட்ட இரட்டை LED ஹெட்லைட்கள் அதற்கென ஒரு சிக்னேச்சர் தோற்றத்தைக் கொடுக்கிறது. செவ்வக LED டெயில்லைட் அதற்கென தனித்துவமான அடையாளத்தை பின்புறத்திலும் உருவாக்கியுள்ளது.

River Indie EV ஸ்கூட்டரின் முன் ஏப்ரனின் ஓரத்தில் பொருத்தப்பட்ட சார்ஜிங் போர்ட், கோடை வெயிலின் கடுமையைக் கையாளக்கூடிய உயர் கான்ட்ராஸ்ட் டிஸ்ப்ளே, ஃப்ளோர்போர்டில் சேமிப்பிட இடத்தை அதிகரிக்க முன் ஃபுட்பெக்குகள் மற்றும் பன்னீர் மவுண்ட்கள் ஆகியவை உள்ளன. மேலும் இந்த ஸ்கூட்டர் இரண்டு ரைடர்களின் சாதனங்களையும் சார்ஜ் செய்ய இரண்டு USB சார்ஜிங் போர்ட்களையும் கொண்டுள்ளது.

பேட்டரி பேக், ரேஞ்ச் & சார்ஜிங்

River Indie EV ஸ்கூட்டர் 4kWh பேட்டரி பேக் மூலம் இயங்குகிறது, இது இந்தியாவில் மின்சார ஸ்கூட்டரில் பொருத்தப்பட்ட மிகப்பெரிய திறன் அலகுகளில் ஒன்றாகும். Indie ஸ்கூட்டரின் பேட்டரி பேக் 120 முதல் 150 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் என்று River நிறுவனம் கூறுகிறது

சார்ஜிங் பற்றி பேசுகையில், River Indie EV ஸ்கூட்டரின் பேட்டரி பேக்கை நிலையான சார்ஜர் மூலம் 5 மணி நேரத்தில் 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். மேலும் இந்த ஸ்கூட்டர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியையும் ஆதரிக்கிறது.

பேட்டரி பேக் 9bhp பவரையும் 26Nm டார்க் திறனையும் வெளியேற்றி ஒற்றை மின்சார மோட்டாருக்கு ஆற்றலை வழங்குகிறது. இது வெறும் 3.9 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 40 கிமீ வேகத்தில் செல்கிறது. மேலும் இதன் டாப் ஸ்பீடு 90km/h ஆகும். River Indie EV ஸ்கூட்டர் Eco, Ride & Rush ஆகிய மூன்று ரைடிங் மோடுகளில் கிடைக்கிறது.

கரடுமுரடான சாலைகளைக் கையாள, River Indie EV ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் முன் போர்க்கையும் பின்புறத்தில் இரட்டை ஹைட்ராலிக் ஸாக்ஸ்களையும் கொண்டுள்ளது. River Indie ஸ்கூட்டர் 14-இன்ச் அலாய் வீல்களைக் கொண்டுள்ளது. மேலும் வாகனத்தை விரைவாக நிறுத்துவதற்கு டிஸ்க் பிரேக்குகளையும் கொண்டுள்ளது. River Indie ஸ்கூட்டரின் முன்புற டிஸ்க் 240 மிமீ அளவைக் கொண்டுள்ளது, பின்புறத்தில் 200 மிமீ யூனிட்டில் உள்ளது, மேலும் இந்த டிஸ்க்குகள் கூடுதல் பாதுகாப்பிற்காக ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் மூலம் உதவுகின்றன.

விலை மற்றும் நிறங்கள்

River Indie EV ஸ்கூட்டர் 1.25 லட்சத்தை தனது ஆரம்ப விலையாகக் கொண்டுள்ளது. மேலும் இது சம்மர் ரெட், மான்சூன் புளு மற்றும் ஸ்பிரிங் எல்லோ என மூன்று முதன்மை நிறங்களில் கிடைக்கிறது.