புதிய Jeep Meridian காரின் டிசைன், டைமென்சன், எஞ்சின், மைலேஜ் மற்றும் விலை பற்றி பின்வருமாறு காணலாம்.
வெளிப்புற டிசைன்:
புதிய Jeep Meridian காரில் சிக்னேச்சர் செவன்-பாக்ஸ் கிரில், ஒருங்கிணைந்த DRLகளுடன் கூடிய LED ஹெட்லேம்ப்கள், முன் பம்பருக்கான குரோம் இன்செர்ட், 18-இன்ச் அலாய் வீல்கள், டூயல்-டோன் ரூஃப் ரெயில்கள், சிலீக், வேரப்பரவுண்ட் LED டெயில் லைட்டுகள், பின்புற சில்வர் ஸ்கிட் பிளேட், கான்ட்ரஸ்ட் பிளாக் ரூஃப், ORVMகள் மற்றும் பின்புற பம்பருக்கான குரோம் இன்சர்ட்ஸ் ஆகியவை வெளிப்புறத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
உட்புறம் டிசைன்:
உள்ளே, 2022 Jeep Meridian காரில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 10 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப், காற்றோட்டமான முன் இருக்கைகள், மல்டி சோன் கிளைமெட் கண்ட்ரோல் மற்றும் இரண்டாவது வரிசை இருக்கைகளுக்கான மின்சார டம்பிள் செயல்பாடு போன்ற உட்புற டிசைன்களையும் கொண்டுள்ளது.
டைமென்சன்
Toyota Innova Hycross கார் 4769 mm நீளத்தையும் 1859 mm அகலத்தையும் 1698 mm உயரத்தையும் கொண்டுள்ளது. மேலும் இது 824 லிட்டர் பூட்ஸ்பேஸில் கிடைக்கிறது. இது 7 பேர் உட்காரும் இருக்கைகளில் கிடைக்கிறது.
எஞ்சின்
Jeep Meridian கார் ஹூட்டின் கீழ், ஒரே பவர்டிரெய்ன் 1959cc கொண்ட 2.0-லிட்டர், நான்கு சிலிண்டர் டீசல் எஞ்சினைக் கொண்டுள்ளது, இது 168bhp பவரையும் 350Nm டார்க்கை திறனையும் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோட்டார் 6 ஸ்பீடு மேனுவல் யூனிட் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. 4x4 யூனிட் முன்பு கொடுத்ததைப் போல பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது. மேலும் இந்த கார் 15.43 இலிருந்து 16.2kmpl வரை மைலேஜ் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விலை
Jeep Meridian கார் 27.75 லட்சத்திலிருந்து 37.15 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கார் டெக்னோ மெட்டாலிக் க்ரீன், ப்ரில்லியண்ட் பிளாக், பேர்ல் ஒயிட், வெல்வெட் ரெட் மற்றும் மக்னீசியோ கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது