Renault Kwid Car - சிறப்பம்சங்கள்

ரெனால்ட் க்விட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் (Hatchback) கார்களில் ஒன்று ரெனால்ட் க்விட் (Renault Kwid). இந்த காரின் 2022 மாடலை ரெனால்ட் நிறுவனம் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 2022 ரெனால்ட் க்விட் காரின் ஆரம்ப விலை 4.49 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாடலில், Std 0.8L, RXE 0.8L, RXL 0.8L, RXT 0.8L, RXT 1.0L, Climber 1.0L MT, RXT Easy-R 1.0L மற்றும் Climber Easy-R 1.0L என எட்டு வேரியன்டுகள் இடம்பெற்றுள்ளன.

முன்பக்க கிரில், அதை சுற்றி ஓடும் குரோம் இழை, மத்திய பகுதியில் அமைந்திருக்கும் ஏர்-இண்டேக் வசத், கருப்பு நிறத்தில் காட்சியளிக்கும் ஸ்கெப் பிளேட்டுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ரெனால்ட் க்விட் ஹேட்ச்பேக் கார், RXL (O) என்ற புதிய வேரியண்ட்டிலும் கிடைக்கும். அத்துடன் மெட்டல் மஸ்டர்டு  மற்றும் ஐஸ் கூல் ஒயிட்  ஆகிய புதிய வண்ண தேர்வுகளையும் 2022 க்விட் காரில் ரெனால்ட் நிறுவனம் வழங்கியுள்ளது. கருப்பு நிற மேற்கூரையுடன் இந்த வண்ண தேர்வுகள் வழங்கப்படுகிறது.

இதுதவிர மூன்லைட் சில்வர் மற்றும் ஜான்ஸ்கர் ப்ளூ  ஆகிய மோனோடோன் வண்ண தேர்வுகளிலும் 2022 ரெனால்ட் க்விட் கார் கிடைக்கும். குறைவான விலையில் கிடைக்க கூடிய பட்ஜெட் கார் என்றாலும், 2022 க்விட் காரில் ரெனால்ட் நிறுவனம் ஏராளமான வசதிகளை வழங்கியுள்ளது.

இதில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ஓஆர்விஎம்கள், எல்இடி பகல் நேர விளக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, முன் பகுதியில் இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் ஆகிய வசதிகள் இங்கே குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.

2022 ரெனால்ட் க்விட் காரில், மொத்தம் 2 பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என 2 பெட்ரோல் இன்ஜின்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.ட்ரைபர் மற்றும் கைகர் ஆகிய கார்களும் ரெனால்ட் நிறுவனத்திற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தருகின்றன. இதில், ட்ரைபர் காரானது எம்பிவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.