Royal Enfield Meteor 350 - சிறப்பம்சங்கள்

   இந்தியாவில் பெருத்த எதிர்பார்ப்பிலுள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய பைக்கிற்கு மெட்டீயோர் 350 என்று பெயர்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிரபலமான தண்டர்பேர்டு 350 மோட்டார்சைக்கிளுக்கு மாற்றாக புதிய மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய சேஸீ, எஞ்சின் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த புதிய மோட்டார்சைக்கிள் வந்துள்ளது.

பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் வந்திருக்கும் இந்த புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளில் எல்இடி ஹெட்லைட், வட்ட வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள், ஹெட்லைட்டிற்கு இருபுறத்திலும் டர்ன் இண்டிகேட்டர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 

பக்கவாட்டில் கண்ணீர் துளி வடிவிலான பெட்ரோல் டேங்க், அகலமான இருக்கைகள், உயர்த்தப்பட்ட அமைப்புடன் ஹேண்டில்பார், வசதியாக கால்களை வைத்துக் கொள்வதற்கு ஏற்ற ஃபுட்பெக்குகள், சவுகரியமான ஓட்டுதல் அனுபவத்தை தரும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இந்த மோட்டார்சைக்கிளின் பெட்ரோல் டேங்க்கில் ராயல் என்ஃபீல்டு லோகோ வசீகரமாக தெரிகிறது. அத்துடன், பக்கவாட்டில் இருக்கைக்கு கீழாக மீட்டியோர் 350 பேட்ஜ் இடம்பெற்றுள்ளது. பின்புறத்தில் எல்இடி டெயில ்லைட்டுகள், அகலமான ஃபென்டர் அமைப்பு, இருபுறத்திலும் வட்ட வடிவிலான இண்டிகேட்டர்கள் இடம்பெற்றுள்ளன. 

மொத்தத்தில் ஒரு முழுமையான க்ரூஸர் தோற்றத்துடன் வசீகரிக்கிறது மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள்.புதிய ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள் ஃபயர்பால், ஸ்டெல்லர் மற்றும் சூப்பர்நோவா ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில், பல்வேறு வண்ணத் தேர்வுகளில் கிடைப்பது குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கிறது.

பெயர்சூட்டப்படலாம் என்றும், இதற்கு ஆரம்ப விலையாக ரூ. 1.68 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு மெட்டீயோர் 350 ஃபையர்பால் பைக், பெனெல்லி இம்பீரியல் 400, ஜாவா 42 மாடல்களுக்கு சரிநிகர் போட்டியை உருவாக்கும்.